கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் அம்சங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தைகள் முந்தைய இரண்டு வாரங்களாக கடும் சரிவை கண்ட நிலையில், கடந்த வாரத்தில் தீபாவளி பண்டிகை காலத்தில் பெரும் ஏற்ற இறக்கத்தில் சந்தையானது காணப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக்காட்டும் விதமாக வலுவான ஜிஎஸ்டி வசூல் விகிதம், சாதகமான பொருளாதார கணிப்புகள் மற்றும் பல சர்வதேச காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்தன.

இதோடு அமெரிக்காவின் பெடரல் வங்கியின் முக்கிய முடிவு எடுக்கலாம் என்ற நிலையில், முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருந்தனர். இது வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் வருமா என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கடந்த வார நிலவரம்

கடந்த வார நிலவரம்

இதற்கிடையில் அப்படி எதுவும் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், பத்திரம் வாங்குதல் குறைக்கப்படலாம் என முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 760.69 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.28% அதிகரித்தும், நிஃப்டி 245.15 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.39% அதிகரித்து 17,916.80 புள்ளிகளாக ஏற்றம் கண்டு முடிவடைந்தது. இதற்கிடையில் பிஎஸ்சி மிட்கேப் மற்றும் பிஎஸ்சி ஸ்மால் கேப் இண்டெக்ஸ் விகிதமானது முறையே 2.83% சதவிகிதம் மற்றும் 3.28% ஏற்றம் கண்டுள்ளது.

முக்கிய காலாண்டு முடிவுகள்

முக்கிய காலாண்டு முடிவுகள்

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை தொடர்ந்து, பல நிறுவனங்களும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன. நடப்பு வாரத்தில் 2,100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது அறிக்கையை வெளியிட உள்ளன. குறிப்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அரபிந்தோ பார்மா, போஷ், மகேந்திரா & மகேந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், பேங்க் ஆப் பரோடா, சோமேட்டோ, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, கிரசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.

முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்

முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்

சோபா, ஷங்கரா பில்டிங் ப்ராடக்ட்ஸ், உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், வொக்கார்ட், அஸ்ட்ராஜெனிகா பார்மா, பி ஹெச் இ எல்., ஹெச் இ ஜி., இந்திரபிரசாதா கேஸ், எம் ஆர் எஃப்., பெட்ரோநெட் எல் என் ஜி., அஃப்ல் இந்தியா, பெர்ஜர் பெயிண்ட்ஸ், க்ளென்மார்க் லைஃப் சயின்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், டாடா டெலி சர்வீசஸ், மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் ஆயில் இந்தியா, பிடிலைப் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலாண்ட் உள்ளிட்ட 2,100க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.

3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு

3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு

வரும் வாரத்தில் 3 நிறுவனங்கள் தங்களது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்ய உள்ளன. குறிப்பாக பேடிஎம் சபையர் ஃபுட்ஸ் (Sapphire Foods ) மற்றும் லேடென்ட் அனலிடிக்ஸ் (Latent View Analytics) ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்களது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்ய உள்ளன. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 21,000 கோடி ரூபாய் நிதி இணைத்து விடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஓ விவரங்கள்

ஐபிஓ விவரங்கள்

பேடிஎம்- இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்ட உள்ளன. இந்த பங்கு வெளியீடானது நவம்பர் 8 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது. இதில் பங்கு விலையானது 2,010 - 2,150 ரூபாயாக ஒரு பங்கிற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

KFC மற்றும் பீட்சா உள்ளிட்ட உணவு சங்கிலி நிறுவனமான Sapphire Foods, நவம்பர் 9 அன்று தொடங்கவுள்ளது. நவம்பர் 11 அன்று முடிவடையவுள்ளது. இதன் விலை நிர்ணயம் 1,120 - 1,180 ரூபாயாகும்.
Latent View Analytics நிறுவனம் தங்களது பொதுபங்கு வெளியீட்டினை நவம்பர் 10 தொடங்கி, நவம்பர் 12 அன்று முடிவடையவுள்ளது. இதன் பங்கு விலை நிர்ணயம் 190 - 197 ரூபாயாகும்.

பங்கு சந்தை பட்டியல்

பங்கு சந்தை பட்டியல்

பேஷன் நிறுவனமான நய்கா நிறுவனம் நவம்பர் 11 அன்று பங்கு சந்தையில் தனது பங்கினை பட்டியலிடவுள்ளது.

பின்டெக் நிறுவனமான ஃபினோ பேமெண்ட் பேங்க் நிறுவனம் நவம்பர் 12 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படவுள்ளது.
பாலிசிபஜார், சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஜேஎஸ் எஸ்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த வாரம் தங்களது பங்குகளை சந்தையில் பட்டியலிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

வரும் வாரத்தில் மாதம் வெளியாகும் முக்கிய காரணிகளில் ஒன்று அக்டோபர் மாதத்திற்கான பணவீக்க விகிதம் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குள் தொழில்துறை உற்பத்தி குறித்த தரவுகள் வெளியாக உள்ளன. மேலும் டிசம்பர் 2021ல் வெளியாகவிருக்கும் கூட்டத்திற்கு முன்னதாக வெளியாக உள்ள நிலையில், இது முக்கியமானதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லறையை பணவீக்க விகிதம் ஆனது 4.35% சரிவினைக் கண்டது. இது முந்தைய மாதத்தில் 5.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் ரிசர்வ் வங்கியின் இலக்கு 4% உள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

முந்தைய இரண்டு வாரங்களாக தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் அன்னிய முதலீடு விகிதமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது வரும் வாரத்திலும் சந்தையில் அதிகரிக்கலாம் என்ற நிலையில் முதலீட்டாளர்கள் பத்திரம் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய காரணிகளை கவனிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி

கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி

கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவிவருகிறது. எனினும் அக்டோபர் 28ல் இருந்து தொடர்ந்து 15,000 கீழாகவே கொரோனா தாக்கத்தின் விகிதமானது இருந்து வருகின்றது. பாதிப்பு இருந்தாலும் 98% பேர் அதிலிருந்து மீண்டும் வருகின்றனர்.

இதற்கிடையில் தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வருகின்றது. தற்போது நாட்டில் 107 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் நடப்பு ஆண்டில் 31.55% பேர் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் முதல் டோஸ் ஊசியினை போட்டுக் கொண்டுள்ளனர்.
எனினும் தற்போது ரஷ்யா, பிரான்ஸ், கொலம்பியா, இத்தாலி, ஜெமனி, போலந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது?

வார கேண்டில் பேட்டர்னில் நிஃப்டி மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாக பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதற்கிடையில் நிஃப்டி 18,000 - 18,200 என்ற லெவலுக்கு இடையே வர்த்தகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 17,700 என்ற நிலையே தொடர்ந்து இருந்து வந்தால், 17,450 - 17,250 என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்

கவனிக்க வேண்டிய சர்வதேச காரணிகள்

அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவு, வேலையின்மை நலன் குறித்தான தரவு, ஐரோப்பாவின் மத்திய வங்கி கூட்டம், தொழில் துறை உற்பத்தி குறித்தான குறியீடு, சீனாவின் வாகன விற்பனை தரவும் பணவீக்கம், ஜப்பானின் தொழில் துறை குறித்தான தரவு உள்ளிட்டவை கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 important things to look out for.. Features that will determine the market in the coming week

Market latest updates.. 10 important things to look out for.. Features that will determine the market in the coming week/ கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் அம்சங்கள்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X