எத்தனையோ பெண்கள் துடிப்பான தொழில் திறமைகளைப் படைத்தும் திருமணத்துக்குப் பின்னர் இல்லத்தரசிகளாகக் காலத்தை கழிக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்தி சக்கைப் போடு போடும் பெண்கள் ஏகப்பட்ட பேர் உள்ளனர்.
வீட்டிலிருந்தபடி ஏதாவது தொழில் செய்து உழைக்க வேண்டும் என்று நினைக்கும் இல்லத்தரசிகளுக்காக இங்கு சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.

வீட்டில் இருந்தபடியே குக்கீஸ், கேக்குகள், பிரட்கள், கார பலகாரங்களை செய்து ஆன்லைனில் விற்றால் நன்றாக சம்பாதிக்கலாம்.
வீட்டில் இருந்தபடியே பல நாளிதழ்கள், இதழ்களுக்கு ஃப்ரீலான்ஸர்களாக இல்லத்தரசிகள் வேலை செய்யலாம். அதுமட்டுமல்லாமல், கைவாத்தியம், சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், தையல் குறிப்புகள் போன்ற தகவல்களை வார, மாத இதழ்களுக்கு அனுப்பினால் நல்ல வருவாயைப் பெறலாம். இதற்குப் பெரிய படிப்பு தகுதி எல்லாம் தேவையில்லை. தங்களது அனுபவத்தில் சிறப்பாக எழுத முடியும்.
கம்ப்யூட்டர் திறன் இருந்தால் பல நிறுவனங்களுக்கு ஆன்லைனில் கஸ்டமர்கேர் அசிஸ்டென்ட்களாக பணி புரியலாம். அது தவிர டேட்டா என்ட்ரி வேலைகளையும் செய்து சம்பாதிக்கலாம்.
இப்போது சமூக ஊடகங்களில் இ-காமர்ஸ் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. இதனால் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடும் இல்லத்தரசிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதிக்க முடியும். பல நிறுவனங்களின் சமூக தள அக்கவுன்ட்களை நிர்வகித்து, ஃபாலோயர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், உதவிகளை நிர்வாகம் செய்யலாம். நிறுவனங்களுக்குத் தேவையான கன்டன்ட்களையும் தயாரித்து பதிவிடலாம்.
வீட்டிலேயே அலங்கார நகைகளை செய்து விற்கலாம். அத்துடன் எம்பிராய்டரி செய்யலாம். மெழுகுவர்த்திகளை விதவிதமாக செய்து ஆன்லைனில் விற்க முடியும். இல்லத்தரசிகளுக்கு இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் எந்த சிரமும் இருக்காது.
சிறுவர்களுக்கு வீட்டில் டியூஷன் எடுக்கலாம். சிறிய வகுப்பு பாடங்கள் எளிதாக இருக்கும் என்பதால் நிறைய குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.
ஆன்லைனில் பிளாக்குகளை நடத்தலாம். யூடியூப் சானல்களைத் தொடங்கி அழகுக் குறிப்புகள், சமையல் ரெசிபிகளை செய்து வீடியோக்களை பதிவேற்றலாம். கிராமிய மற்றும் பாரம்பரிய சமையல் ரெசிபிகளுக்கு யூடியூபில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பாரம்பரிய சமையல் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிகின்றனர். இதன் மூலம் யூடியூபில் நல்ல வருமானத்தை ஈட்டலாம். வீடியோக்களில் இடம் பெறும் விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மசால் சாமான்களை தயாரித்தும் விற்கலாம்.
இல்லத்தரசிகள் ஏதாவது ஒரு தொழிலில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம். கன்சல்டன்டாக வேலை பார்க்கலாம்.
நன்றாக சமைக்கத் தெரிந்த இல்லத்தரசிகள் சமையல் வகுப்புகளை நடத்தலாம். சமையல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் வீட்டிலும் நடத்தலாம். இது தவிர யூடியூப்பிலும் சமையல் வகுப்புகளை நடத்தலாம். இதன் மூலம் மிக நல்ல சம்பாத்தியத்தைப் பெற முடியும்.
இந்தியாவில் இப்போது கிளவுடு கிச்சன் எனப்படும் ஹோம்லி கிச்சன்களுக்கு நல்ல வரவேற்பு மக்களிடையே கிடைத்து வருகிறது. அதிக முதலீடு செய்யாமல் வீட்டிலேயே சமையல் செய்து உணவுகளை விற்கலாம். சொந்தமாக வெப்சைட் தொடங்கி அதிலும் ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடன் கூட்டு வைத்தும் உங்களது கிளவுடு கிச்சன் தயாரிப்புகளை சிறப்பான முறையில் விற்று லாபம் பெறலாம்.
Story written by: Jayachandran
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications