மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்வலைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் - ஈரான் இடையிலான நேரடி மோதலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலர் வரை அதிரடியாக உயரும் என தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் எச்சரித்துள்ளது.
இந்த விலை உயர்வு இந்திய பங்குச் சந்தையில் ஒருபுறம் ஓ.என்.ஜி.சி போன்ற எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தாலும், மறுபுறம் பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாப வரம்பை கடுமையாக பதம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் இந்த நிறுவனங்கள் பெரும் மார்ஜின் அழுத்தத்தில் சிக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை எப்படி பாதுகாப்பது? எந்த பங்குகளை தவிர்க்க வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்? நிபுணர்களின் முழுமையான அலசல் இதோ..

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் சப்ளை தடைபடுத்தபடலாமோ என்ற அச்சமானது, எண்ணெய் சந்தையில் பற்றி எரிந்து கொண்டுள்ளது. இந்த சூழலில் தான் தரகு நிறுவனமானது இந்திய எண்ணெய் நிறுவனங்களின் மார்ஜின் குறித்த கவலையை எழுப்பியுள்ளது, இருப்பினும் இந்த பதற்றத்தின் மத்தியிலும் ஓ.என்.ஜி.சி போன்ற எண்ணெய் எடுக்கும் அப்ஸ்ட்ரீம் நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் பலன் அடையலாம். ஆனால் அதே எண்ணெயை விற்பனை செய்யும் நிறுவனங்கள் (OMCs), நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் (CGD) மற்றும் எரிவாயு பயன்பாட்டு நிறுவனங்கள் கடுமையான சவால்களை சந்திக்கலாம். குறிப்பாக லாபத்தில் சரிவை சந்திக்கும்.
ஹார்மூஸ் ஜலசந்தி என்பது வெறும் சாதாரண கடன் வழி பாதை அல்ல. இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வாயில் போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் நுகர்வில் சுமார் 15 - 20%, தினமும் இந்த குறுகிய கடன் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதே சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களில் சுமார் 8% இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் எல்.என்.ஜி எரிவாயுவில் சுமார் 20% இந்த பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த ஏற்றுமதியில் பெரும்பகுதி இந்த குறுகிய ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாதையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தாறுமாறாக உயரும்.
இது ஒரு புறம் கச்சா எண்ணெய் எடுக்கும் ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு லாபகரமாக அமையலாம். அவற்றின் லாபம் உயர வழிவகுக்கும். கப்பல் வாடகை உயர்வால் ஷிப்பிங் நிறுவனங்களும் பயனடையும். அதேசமயம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் அதிக விலைக்கு கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. வாங்கிய அதே விலையில் விற்பனை செய்யவும் முடியாது. ஆக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி ஏற்படுத்தாவிட்டால், நஷ்டத்தையே சந்திக்கலாம். அதேபோன்று IGL மற்றும் MGL போன்ற எரிவாயு நிறுவனங்களும் செலவு அதிகரிக்கப்பால் சிக்கலை எதிர்கொள்ளும்.
ஹார்மூஸ் ஜலசந்தி-க்கு மாற்று பாதைகள் இருந்தாலும், அவை தினசரி 70 -80 லட்சம் பேரல்களை மட்டுமே கையாள முடியும். ஆனால் தற்போது இப்பாதையில் தினசரி 2.1 கோடி பேரல்கள் செல்கின்றன. எனவே தடை ஏற்பட்டால், அவை நிச்சயம் எரிபொருள் விலையில் தாறுமாறாக விலை ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?
இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பில்லை என்றாலும், தொடர்ந்து சுத்திகரிப்பு லாபம் அதிகரிப்பு லாபம் மேம்பட உதவும். இதே மற்ற எண்ணெய் நிறுவனங்களான, ஐஓசி, பிபிசிஎல், ஹெச்சிபிஎல் போன்ற நிறுவனங்களில் லாப வரம்பானது, கச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு 10 டாலர் உயர்ந்தால், மேற்கண்ட நிறுவனங்களின் லாப வரம்பானது ஒரு லிட்டருக்கு 4.50 ரூபாய் குறையும். இது உடனடியாக எரிபொருள் விலையை உயர்த்தா விட்டால் பெரும் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் தான் குஜராத் கேஸ், மகா நகர் கேஸ், இந்திர பிரசாத் கேஸ் போன்ற நிறுவனங்களும் மார்ஜின் சரிவை எதிர்கொள்ளலாம். கெயில் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி போன்ற நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு உடனடியாக இருக்காது. இருப்பினும் இப்பிரச்சனை நீண்ட காலத்திற்கு நீடித்தால் பாதிப்பு இருக்கும். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications