பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

உலகமே உற்று நோக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்கள், உலகப் பொருளாதாரத்தையே உலுக்க தொடங்கியுள்ளன. இந்த போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் சரிவை சந்திக்க, முதலீட்டாளர்கள் அனைவரும் இப்போது பாதுகாப்பான புகலிடமான தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி தஞ்சம் புகுந்துள்ளனர்.

இன்று காலை வர்த்தகத்திலேயே இந்தியச் சந்தையில் தங்கம் விலையானது வலுவான ஏற்றத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டும் சவரனுக்கு சுமார் 4,000 முதல் 5,000 ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான், பதற்றம் நீடித்தால் தங்கம் விலை இன்னும் பல மடங்கு உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சாமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரையும் அதிர வைத்துள்ள இந்த விலை ஏற்றம், வரும் நாட்களில் எங்கே போய் நிற்கும்? நிபுணர்களின் லேட்டஸ்ட் கணிப்பு என்ன? விரிவாகப் பார்ப்போம்.

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட முரண்டு பிடித்து வரும் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று முன் தினம் திடீரென தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட பலரும் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என பலரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு போர் பதற்றமானது உருவாகியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த சூழலில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரித்துள்ளது. இது இன்னும் விலை ஏற்றம் காண வழிவகுக்கலாம் என்ற சூழல் காணப்படுகிறது.

தொடர்ந்து இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த போர் பதற்றமானது நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த பதற்றமானது எவ்வளவு காலம் வரையில் நீடிக்குமோ, அவ்வளவு காலம் வரையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையையும் பதற்றமாகவே வைத்திருக்கும். இப்பதற்றத்தின் மத்தியில் உலகளாவிய பங்குச் சந்தைகள் அழுத்தத்தில் உள்ளதால், பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் வெள்ளி விளங்குகிறது. இந்த போக்கு இன்னும் சிறிது காலத்திற்கு நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று கேப் அப் ஆக தொடங்கியதுடன், அதிக ஏற்ற இறக்கத்துடனும் காணப்படுகிறது. இந்த போக்கானது இனி வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
சர்வதேச அளவில் ஏற்கனவே இருந்து வரும் பல்வேறு பதற்றங்கள் மத்தியில், மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல் மற்றும் இடிஎஃப் (ETF) முதலீடுகள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்கனவே ஏறுமுகத்தில் உள்ளன. டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக வரிகள் சட்ட விரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உலகளாவிய நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது. தற்போது இவற்றுடன் ஈரான் - இஸ்ரேல் பிரச்சனையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக கமேனி கொல்லப்பட்டதை அடுத்து சர்வதேச அளவில் பதற்றமானது அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் இந்திய பியூச்சர் சந்தையில் வெள்ளி விலை 22,054 ரூபாய் அல்லது 8.72% உயர்ந்தது. இதே கடந்த வாரம் தங்கம் விலை 5,228 ரூபாய் அல்லது 3.33% அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 12.55% ஏற்றம் கண்டும், தங்கம் 3.3% ஏற்றம் கண்டும் காணப்படுகிறது.

தற்போது ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழல் மத்தியில். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விநியோக தடை ஏற்படும் என்ற அச்சத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வதும், தங்கம் விலைக்கு ஆதரவாக உள்ளது. அதோடு இந்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்காவின் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள், சில்லறை விற்பனை மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) கூட்டம் போன்றவை சந்தையின் போக்கை மாற்றக்கூடும்.
வார இறுதியில் போர் பதற்றம் குறைந்து பேச்சு வார்த்தைகள் நடந்தால், இந்த விலை உயர்வுக்கு பிறகு லாப நோக்கம் கருதி விற்பனை நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது அவசியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+