சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி, பிரிட்டன் நாட்டில் இருந்து கிட்டதட்ட 100 டன்னுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
காரணம், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு அதிகமாகத் தங்கம் ரிசர்வ் வங்கி தனது கஜானா-வில் சேர்த்தது இதுவே முதல் முறையாகும். அடுத்த சில மாதங்களில் இதே போன்று ஒரு ஷிப்மென்ட் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து, ஆர்பிஐ தனது கஜானா-வில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு: மார்ச் 2024 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த தங்கக் கையிருப்பு 822.1 டன் ஆகும். இதில், 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் இருந்தது.
சமீப ஆண்டுகளில், உலகளவில் மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. 2023 நிதிய ஆண்டில் மட்டும், உலகளவில் மத்திய வங்கிகள் 27.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.
தங்கம் இடமாற்றத்திற்கான காரணம்: "ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து அதிகப்படியான தங்கத்தை வாங்கத் தொடங்கியது. இப்படி வாங்கிய தங்கத்தை எங்குச் சேமித்து வைக்க வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது ஆர்பிஐ.
வெளிநாடுகளில் அதிக அளவு தங்கம் இருந்ததாலும், தற்போது நிலவும் புவிசார் அரசியல் பிரச்சனை காரணமாகவும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான தங்கத்தை அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது என்று ஆர்பிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு: இந்திய ரிசர்வ் வங்கி, இந்த தங்கத்தை இறக்குமதி செய்யச் சுங்க வரி விலக்கு பெற்றுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு, அரசு சொத்துக்கள் தொடர்பான வரிக்கு விலக்கு கொடுத்துள்ளது. இருப்பினும், இறக்குமதியின் மீது விதிக்கப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) விலக்கு அளிக்கப்படவில்லை.
உலகளாவிய போக்கு: ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுப்பதற்கும், புவிசார் அரசியல் பிரச்சனைகளின் பாதிப்பைக் குறைப்பதற்கும் தங்கம் ஒரு பாதுகாப்பாகக் கருதப்படுவதால், உலகளவில் மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாகச் சீனா மத்திய வங்கியும், சீன மக்களும் அதிகப்படியான தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications