இந்தியாவில் இருக்கும் பல நொறுக்கு தீனிகளில் மிக முக்கியமான ஒன்று சிப்ஸ். பல சுவைகளில் இருக்கும் சிப்ஸ் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. சிப்ஸ்-க்கு 12 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கேரளா பென்ச் முடிவு செய்துள்ளது.
பிராண்டட் சிப்ஸ் மற்றும் நொறுக்கு தீனிக்கு ஏற்கனவே வரி விதிக்கப்பட்டு வருகிறது, உதாரணமாகக் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் லேஸ் சிப்ஸ்-க்கு 12 சதவீதம் வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது.
பிராண்டட் அல்லாத சிப்ஸ்
இதேபோல் தற்போது பிராண்டட் அல்லாத சிப்ஸ்-க்கு நம்கீன் எனப் பிரிவில் 5 சதவீதம் வரையில் மட்டுமே வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதற்கும் 12 சதவீதம் வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி அத்தாரிட்டி பார் அட்வான்ஸ் ரூலிங்க்ஸ்-ன் கேரளா பென்ச் அறிவித்துள்ளது.
பாலக்காடு கே.சாமிநாதன்
கே.சாமிநாதன் என்கிற பாலக்காடு-ஐ சேர்ந்த வியாபாரி ஒருவர் பல்வேறு சிப்ஸ், அல்வா, வறுத்த முந்திரி, வறுத்த கடலை வகைகளைப் பிராண்டட் அல்லாத பொருட்களாக விற்பனை செய்து வருகிறார்.சாமிநாதன் தான் விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் நம்கீன் வகையைச் சார்ந்தது அதனால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டும் விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார் .
கேரளா பென்ச்
இதற்கு ஜிஎஸ்டி அத்தாரிட்டி பார் அட்வான்ஸ் ரூலிங்க்ஸ்-ன் கேரளா பென்ச், அல்வா-க்கு மட்டுமே 5 சதவீத வரி பொருந்தும் மற்றவை வறுத்த முந்திரி, வறுத்த கடலை ஆகியவற்றுக்குப் பிராண்டட் பொருளாக இல்லாவிட்டாலும் 12 சதவீதம் வரி பொருந்தும் என விளக்கம் அளித்துள்ளது.
12 சதவீத ஜிஎஸ்டி வரி
28.06.2017 வெளியான மத்திய வரி விதிப்பு உத்தரவின் படி சாமிநாதன் விற்பனை செய்யும் அனைத்துவிதமான பலாப்பழ சிப்ஸ், வாழைப்பழ சிப்ஸ், உருளைக்கிழங்கு சிபஸ், கிழங்கு சிப்ஸ், வறுத்த முந்திரி ஆகியவை 12 சதவீத வரியின் கீழ் (6% -CGST + 6% - SGST) பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது கேரளா பென்ச்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications