ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது அத்தனை எளிதான விஷயம் இல்லை. அதற்கு இடத்தை தேர்வு செய்து நிலங்களை கைப்பற்றி அனைத்தையும் முறையாக திட்டமிட வேண்டும். ஒரு அரசாங்கமே ஸ்மார்ட் சிட்டியை கட்டமைக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு கிராம விவசாயிகள் அனைவரும் இணைந்து ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி ஒட்டுமொத்த நாட்டையே வியக்க வைத்துள்ளனர். 120 விவசாயிகளால் கட்டமடைக்கப்பட்ட இந்த நகரம் பார்ப்பதற்கு சிங்கப்பூரை போல காட்சி தருகிறது. நவீன வசதிகள் கொண்ட பள்ளிகள், மருத்துவமனைகள், மால்கள் என இந்த நகரத்திற்கு வருகை தருபவர்கள் நாம் வெளிநாட்டும் இருக்கிறோமோ என்ற உணர்வை பெறுவார்கள். இப்படி ஒரு ஸ்மார்ட்டான நகரத்தை வடிவமைத்தது 120 விவசாயிகள் என்பது தான் நம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.

புனே அருகே இருக்கிறது மகர்பட்டா நகரம். 1993 ஆம் ஆண்டு இது விவசாய நிலங்கள் நிறைந்த ஒரு குக்கிராமம். ஆனால் இது தான் தற்போது இந்தியாவே கண்டு வியக்கும் ஸ்மார்ட் சிட்டி. இங்கிருந்த விவசாய நிலங்களை பல்வேறு ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கையகப்படுத்த முன் வந்தனர். ஆனால் 123 விவசாய குடும்பங்கள் தங்களுடைய பாரம்பரிய நிலங்களை விற்பனை செய்ய மறுத்துவிட்டன. இதற்கு மாற்றாக அவர்களாகவே நிலங்களை ஒருங்கிணைத்து தங்களுக்கான நகரத்தை உருவாக்கினர்.
சதீஷ் மஹர் என்பவர் இதற்கென ஒரு நிறுவனத்தை தொடங்கி அனைத்து விவசாய குடும்பத்தையும் ஒருங்கிணைத்து நிலத்தொகுப்பு முறையை உருவாக்கினார். நிலத் தொகுப்பில் அங்கிருந்த அனைத்து விவசாய குடும்பங்களும் ஒரு பங்குதாரர்களாக மாறினர். அடுத்ததாக அரசின் அனுமதியை பெற்றனர். அரசு அனுமதி பெறுவதும் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதும் பெரிய சவாலாக இருந்தது.

விவசாயிகளால் சிட்டியை கட்டமைக்க முடியுமா என அனைவரும் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இந்த விவசாயிகள் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள். அப்படி உருவானது தான் இந்த மகர்பட்டா நகரம். 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நவீனமான டவுன்ஷிப் இது. தற்போது இங்கே ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள், ஐடி பூங்காக்கள் ஆகியவையோடு மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளி சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் அமைப்புகள், முறையான கழிவு மேலாண்மை அமைப்புகள் அனைத்தும் இங்கே நிறுவப்பட்டு இருக்கின்றன. இங்கே இருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கி அதில் கட்டப்பட்ட அனைத்து கட்டுமானங்களில் இருந்தும் மாத வாடகை வருமானம் பெறுகின்றனர்.
வழக்கமாக நிறுவனங்கள் வசம் நிலத்தை வழங்கிவிட்டால் முதலில் அதற்கு கிடைக்கும் பணத்தோடு நின்றுவிடும். ஆனால் விவசாயிகளுக்கு இங்கே தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒப்ரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய வருமானம் அனைத்தும் ஸ்மாட்டான இவர்களின் முடிவுகளால் இவர்கள் கைகளுக்கே கிடைக்கிறது.
விவசாயிகள் பலரும் கட்டட உரிமையாளர்களாகவும் தொழில் முனைவோர்களாகவும் மாறியுள்ளனர். இன்றும் இந்த நகரம் இரண்டாம் தலைமுறை விவசாயிகளால் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு அரசாங்கத்தால் கூட முடியாத ஒன்றை இன்று விவசாயிகள் செய்து காட்டி சாதனை படைத்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications