ஜாதிக்காய் சாகுபடியில் ரூ.3 கோடி லாபம்.. ஆஸ்திரேலியாவுக்கு அசால்ட்டா அனுப்பும் 120 விவசாயிகள்!

மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பொள்ளாச்சி கிராமத்தில் வசிக்கும் 120 விவசாயிகள் ஜாதிக்காயை உற்பத்தி செய்து நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றனர். பொதுவாக எந்த ஒரு விளைபொருளானாலும் அவை 2, 3 டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றும் ரீடைலர்களைக் கடந்து மக்களைச் சென்றடையும். அவ்வாறு செல்லும்போது அந்த பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்திருக்கும். விவசாயிகளிடமிருந்து வாங்கிய விலையோடு ஒப்பிடுகையில் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் விலை அதிகமாக இருக்கும்.

"எங்கள் வீட்டுக்கு விற்பனையாளர் வந்து விளைந்த பொருட்களை எடுத்துச் செல்வார். அவர்கள் விருப்பத்தின் படியே விலை நிர்ணயம் செய்யும்படி பேச்சு வார்த்தையை மேற்கொள்வார். இதனால் எங்கள் தயாரிப்புகள் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் போது எந்த விலையில் விற்கப்படுகிறது என்பது எங்களுக்கு தெரியாது" என்று 11 ஏக்கர் நிலத்தில் ஜாதிக்காயை பயிரிடும் விவசாயியான விஸ்வநாத் கூறுகிறார்.

 ஜாதிக்காய் சாகுபடியில் ரூ.3 கோடி லாபம்.. ஆஸ்திரேலியாவுக்கு அசால்ட்டா அனுப்பும் 120 விவசாயிகள்!

விஸ்வநாத் உட்பட சுமார் 120 விவசாயிகள் ஒன்றிணைந்து பொள்ளாச்சி கிராமத்தில் ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி இறுதி நுகர்வோருக்கு தங்கள் விளை பொருட்களை கூட்டாக விற்பனை செய்கின்றனர். இதனால் பொள்ளாச்சி கிராம விவசாயிகள் எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் ஜாதிக்காய் விளைச்சலில் இருந்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி விவசாயிகள் தற்போது ஆஸ்திரேலியா கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் தனிப்பட்ட முறையில் ஜாதிக்காய் விலைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். இது அவர்களின் விவசாய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்களாக மாறியுள்ளது.

இதனால் ஒரு ஆண்டுக்கு ரூ.3 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்கின்றனர். கூட்டு முயற்சியால் அவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்தி உள்ளனர். முன்பு தங்களின் விலைப் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.300 மட்டுமே கிடைத்திருக்கிறது. தற்போது எங்கள் விளை பொருட்களை கிலோவுக்கு 470 ரூபாய் வரை கிடைக்கிறது. கடந்த ஆண்டு 550 கிலோ ஜாதிக்காயை விற்று ரூ.50 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டினேன் என்று பெருமையுடன் கூறுகிறார் விஸ்வநாத்.

120 விவசாயிகளில் வெற்றிக்கு காரணமான ஆர்.ரஞ்சித் குமார் என்பவர் ஜாதிக்காய் சாகுபடி மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும், பாரம்பரிய விவசாய முறைகளில் புரட்சியை ஏற்படுத்தவும் பெரிதும் உதவியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பத்தில் உயர்கல்வியை முடித்த பிறகு ரஞ்சித் பெங்களூரில் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

2017-ஆம் ஆண்டு தனது தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் தனது சொந்த கிராமத்திற்கே திரும்பியுள்ளார். வீடு திரும்பியதும் தனது குடும்பத்தின் 60 ஏக்கர் விவசாய நிலத்தை கவனிக்க வேண்டிய சூழல் ரஞ்சித்துக்கு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் ரஞ்சித் ஜாதிக்காய் சாகுபடியில் இறங்க முடிவு செய்துள்ளார்.

தேங்காய் போன்ற மற்ற பாரம்பரிய பயிர்களுடன் ஒப்பிடும்போது ஜாதிக்காய் இரட்டை மகசூல் தருவதை தெரிந்து கொண்டு ஜாதிக்காயை வளர்க்க முடிவு செய்துள்ளார். அவர் மட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் இதைப் பற்றி கூறி புரிய வைத்துள்ளார்.

விரைவிலேயே நுகர்வோருக்கு சென்றடையும் பொருட்களில் விற்பனையாளர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் உட்பட்ட பலர் இருப்பதை புரிந்து கொண்டார் ரஞ்சித். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை வைத்தே கணிசமாக லாபம் ஈட்டி கொண்டிருந்ததையும் பார்த்துள்ளார். ஆனால் இந்த லாபம் விவசாயிகள் பெரும் லாபத்தை விட அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக 10 ஏக்கர் நிலத்தில் ஜாதிக்காயை பயிரிட்டுள்ளார்.

ஒருமுறை இவர் பயிரிட்ட பொருட்களை வாங்குவதற்காக விற்பனையாளர் ஒருவரிடம் ரஞ்சித்துக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மற்ற விவசாயிகள் அடுத்த வியாபாரிகளின் தயவில் இருப்பதை தெரிந்து கொண்டு விளைந்த பொருட்களை அறுவடை செய்வது முதல் மழையில் நனைந்து விட்டால் அவற்றை உலர்த்துவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் போது இது போன்ற விற்பனையாளர்கள் லாபத்தில் பாதியை எடுத்து விடுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட ரஞ்சித், மறு விற்பனையாளர் இல்லாமல் நுகர்வோருக்கு பொருட்களை விற்பதுதான் வெற்றி என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் ரஞ்சித்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எனவே இந்த நெட்வொர்க்கை சீரமைக்கவும் ஏற்றுமதியாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தவும் எண்ணம் கொண்டு விவசாயிகளை ரஞ்சித் அழைத்து பேச தொடங்கியுள்ளார். இதற்காக FPC என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

FPC ஆனது தர மதிப்பீட்டிற்காக பொதுவான இடத்தில் விளைபொருட்களை ஒருங்கிணைத்தல், நேரடி ஏற்றுமதிக்கான முதல் தரப் பொருட்களைப் பிரித்தல் மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக உள்ளூர் வர்த்தகர்களுக்கு இரண்டாம் தரப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நடைமுறைகளை நடைமுறைப்படுத்தியது. இந்த அணுகுமுறை விவசாயிகளுக்கு சிறந்த வருவாயை உறுதி செய்தது.

மேலும், ரஞ்சித் கூறுகையில், FPC ஆனது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு பிரத்யேக வங்கி கணக்கை நிறுவுவதன் மூலம் நிதி வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தியது, இது உறுப்பினர்களிடையே நம்பிக்கையையும் அதிகரித்தது.

பொருளாதார முன்னேற்றங்களுக்கு அப்பால், ஜாம், ஜெல்லி மற்றும் ஊறுகாய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க பழங்களைப் பயன்படுத்துவது போன்ற ஜாதிக்காய் துணை தயாரிப்புகளின் மாற்றுப் பயன்பாடுகளை ஆராய்வதையும் FPC நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூட்டு முயற்சிகள் மற்றும் புதுமையான உத்திகள் மூலம், ரஞ்சித் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், பாரம்பரியக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, ஜாதிக்காய் தொழிலில் நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

"இங்கே, நான் வாட்ச்மேன், கிளார்க், ஆடிட்டர் முதல் நிறுவனத்தின் மேலாளர் வரை பல வேடங்களில் நடிக்க வேண்டும். ஆனால் இறுதியில், எனது கிராமத்தில் உள்ள 120 விவசாயிகளின் அவலத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இந்த சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு விற்கிறார்கள் என்பதை அறியாமல், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் உள்ள தொலைதூர இடங்களுக்கு தங்கள் பயிர்களை ஏற்றுமதி செய்கிறார்கள்", என்று கூறியுள்ளார் ரஞ்ஜித்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+