இன்று காலையில் வர்த்தகம் தொடங்கி சில நிமிடங்களுக்குள்ளேயே இந்திய சந்தைகள் லோவர் சர்கியூட் காரணமாக பங்கு சந்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது இனி அடுத்து இன்னும் 45 நிமிடங்கள் கழித்தே வர்த்தகம் மீண்டும் தொடங்கும்.
இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது பரவலாக பரவி வரும் ஹேஸ்டேக் தான் இந்த #Blackfriday, அதாவது கறுப்பு வெள்ளி. சரி இது பற்றி என்ன தான் சொல்ல வருகிறார்கள், வாருங்கள் பார்க்கலாம்.
படு வீழ்ச்சி
இன்று காலை வர்த்தகம் தொடக்கத்திலேயே படு வீழ்ச்சி காண ஆரம்பித்த இந்திய பங்கு சந்தைகள் சில நிமிடங்களிலேயே முடங்கி போயின. முதலீட்டாளர்கள் சந்தையில் என்ன தான் நடக்கிறது. இருக்கிற பங்குகளை விற்று விடலாமா? அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை எனலாம். அந்தளவுக்கு படு வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் பல முதலீட்டாளர்கள் நஷ்டத்தினையே கண்டிருப்பர். இதனால் இது ஒரு கறுப்பு தினம் என்று கூறப்படுகிறது.
இது ஒரு நல்ல அறிகுறி அல்ல
ஆக இந்த நாள் 13 மார்ச், வெள்ளிக்கிழமை கருப்பு தினம், அதாவது Black Friday என்று கூறி வருகிறார்கள். மேலும் இது இந்திய சந்தைகளுக்கு நல்ல அறிகுறி அல்ல. எனினும் கவனமாக இருங்கள் என்றெல்லாம் ட்விட்டர் பக்கத்தில் கூறி வருகிறார்கள்.
கொரோனாவை விட பாதிப்பு அதிகம்
சில ட்விட்டுகள் கொரோனா தாக்கத்தினை விட மக்கள் தங்களது முதலீடுகள் கண் முன் நஷ்டமாவதை பார்த்தே இறந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளனர். இதனால் நிச்சயம் இது ஒரு கறுப்பு தினம் தான். இது பிளாக் பிரைடே தான் என்பதில் சந்தேகமேதும் இல்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
ரூ.10 லட்சத்துக்கு 20 ரூபாய் தான் மிச்சம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மற்றொரு ட்விட்டர் கணக்கில், நான் 10 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கடந்த மாதம் வாங்கி இருந்தேன். அதன் தற்போதைய மதிப்பு வெறும் 20 ரூபாய் தான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக இது தனக்கு #Blackfriday என்றும் மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு நல்ல பாடம்
இன்னும் சிலர் தங்களது முதலீடுகள் சில நிமிடங்களில் காணாமல் போய்விட்டது என்றும், அதிலும் புதிதாக சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்றும் தங்களது பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தாங்கள் பார்க்கும் முதல் லோவர் சர்கியூட் இது. ஆக இது கறுப்பு வெள்ளி எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதை நிறுத்தி விடுங்கள்
உண்மையில் இது ஒரு கறுப்பு தினம் தான். இது ஒரு ஸ்டாக் மார்கெட் அல்ல, அது ஸ்டாப் செய்ய வேண்டிய மார்கெட் தான் என்றும் பலவாறு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications