மத்திய அரசு நடப்பு ஆண்டு முடிவதற்குள் 16வது நிதி ஆணையத்தை (16th Finance Commission)நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2026 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியில் வரி வருவாயை பிரிப்பதற்கான சரியான விகிதத்தை பரிந்துரைப்பதே இந்த 16வது நிதி ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.
ஜிஎஸ்டி வரி பகிர்வில் பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையிலும், பல மாநிலங்களுக்கு அதிகப்படியான வரி பகிர்வு அளிக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையிலும், ஏப்ரல் 1, 2026 முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வரி பகிர்வு முடிவை நிர்ணயம் செய்ய 16வது நிதி ஆணையம் மிகவும் முக்கியமானது.

இதோடு 16வது நிதி கமிஷனின் உறுப்பினர்களையும் அதன் விதிமுறைகளையும் மத்திய அரசு தற்போது இறுதி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மறைமுக வரி நீக்கப்பட்டு ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய மாநில அரசுகள் மத்தியில் பிரிக்கப்படும்.
பைனான்ஸ் ஆணையம் என்பது ஒரு அரசியலமைப்பாகும், இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நிதியியல் உறவுகள் குறித்த பரிந்துரைகளை வழங்குகிறது. அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாதமும் இந்தியா முழுவதும் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை மத்திய மாநில அரசுகள் மத்தியில் எவ்வளவு பிரிக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்கிறது.
15வது நிதி ஆணையம் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்திற்கானது, இதன் அறிக்கையை நவம்பர் 9, 2020 அன்று சமர்ப்பித்தது. என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதியியல் ஆணையம், 14வது கமிஷனின் பரிந்துரையைப் போலவே, வரிப் பகிர்வு விகிதத்தை 42 சதவீதமாக நிர்ணயம் பரிந்துரைத்தது.

தற்போது மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வு விகிதம் 42 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தும் போது பெட்ரோல், டீசல் போன்றவையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாநில அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான முடிவுகளை இந்த 16வது நிதி ஆணையம் எட்டுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு சுமார் 42 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் எவ்வளவு, செஸ் வரி எவ்வளவு, மாநில அரசுகளுக்கான பங்கீடு என்ன என்பது பற்றி மத்திய நிதியமைச்சகம் ரிப்போர்ட் அளித்து வருகிறது.
15வது பைனான்ஸ் கமிஷனில் வரி பகிர்வு அளவுகள் மட்டும் அல்லாமல் நிதி பற்றாக்குறை, மத்திய மாநில அரசுகளுக்கான கடன், ஒவ்வொரு மாநிலத்தின் மின்சார துறை நிதி நிலையை அடிப்படையாக கொண்டு கூடுதல் கடன் வாங்குவதற்கான அளவுகள் ஆகியவற்றையும் பரிந்துரை செய்யும்.
இதன் அடிப்படையில் மத்திய அரசு நாட்டின் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையை 2025-26 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 4.5 சதவீதமாக கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டு 6.4 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications