சென்னை: விரைவில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.2,000-க்கும் கீழ் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎன்பிசி-டிவி18 வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறிய தொகை கொண்ட பரிவர்த்தனைகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது சிறு வணிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. இதனை அடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இதனால் தான் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் யுபிஐ மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கணிசமான அளவு அதிகரித்துள்ளது .

அப்போது அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 2000 ரூபாய்க்கும் கீழ் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான சேவை வரியை நீக்கியது. எனவே பெரும்பாலான மக்கள் இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறினார். இந்த சேவை வரி நீக்கம் என்பது 2016-ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.
அப்போது ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இல்லை. 2017 ஆம் ஆண்டில் தான் ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்தது. இந்த நிலையில் வருகின்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் ரூ.2,000க்கும் கீழ் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு பேமென்ட் அக்ரிகேட்டர் கட்டணமாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
பேமென்ட் அக்ரிகேட்டர் என்பவை வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுமூகமாக்க செயல்படும் நிறுவனங்கள் ஆகும். ரேசர்பே, அமேசான் பே உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். பொதுவாகவே இது போன்ற பேமென்ட் கேட்வே தளங்கள் வியாபாரிகளிடம் இருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை கட்டணமாக பெறுகின்றன. இந்த கட்டணத்தின் மீது புதிய ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
பேமென்ட் கேட்வே நிறுவனங்கள் இந்த வரித்தொகையை வியாபாரிகள் மீது தான் சுமத்தும் என சொல்லப்படுகிறது. ஒரு வேலை இந்த வரி நடைமுறைக்கு வந்தால் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக குறைந்த மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக தற்போது 1000 ரூபாய்க்கு ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது தற்போது இருக்கக்கூடிய அமைப்பின்படி 1 சதவீதம் பேமென்ட் கேட்வே கட்டணமாக வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
அதாவது 1000 ரூபாய் பரிவர்த்தனைக்கு 10 ரூபாயை வியாபாரிகள் பேமண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். இந்த புதிய ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு வந்தால் இந்த கட்டணம் 10 ரூபாயில் இருந்து 11. 80 ரூபாயாக உயரும்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்பதால் பிரச்னை இல்லை. இந்தியாவில் பெரும்பாலும் 2000 ரூபாய்க்கு கீழ் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் யுபிஐ வாயிலாகவே நடைபெறுகின்றன.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications