நாடு முழுவதும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWA) வசூலிக்கும் மாத மெயின்டனன்ஸ் கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என கேரளா காங்கிரஸ் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் நாடு முழுவதும் இது குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். சென்னையில் 35-40 லட்சம் பேர், இப்படி நாடு முழுவதும் ஒவ்வொரு பெரு நகரங்களிலும் அப்பார்ட்மென்ட் வீட்டில் குடியிருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் அப்பார்ட்மென்ட் கலாச்சாரம் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களிலும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில் இந்த 18 சதவீத ஜிஎஸ்டி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா..? அப்பார்ட்மென்ட் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மெயின்டனன்ஸ் கட்டணத்தில் ஜிஎஸ்டி எவ்வாறு செயல்படுகிறது? வாங்க முழு விளக்கத்தையும் பார்ப்போம்.
குடியிருப்போர் நலச் சங்கங்கள் வசூலிக்கும் மெயின்டனன்ஸ் கட்டணத்தில் ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளைத் தெளிவுபடுத்தும் வகையில், நிதி அமைச்சகம் 109/28/2019- ஜிஎஸ்டி சுற்றறிக்கையை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கையின்படி, மாத பராமரிப்பு கட்டணமாக அதாவது மெயின்டனென்ஸ் கட்டணம் ரூ.7,500 வரை செலுத்தும் குடியிருப்பாளர்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. முன்னதாக, இந்த வரம்பு ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது 2018 ஜனவரி 25 அன்று ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும், குடியிருப்பு நலச் சங்கத்தின் மொத்த வருவாய் அல்லது மெயின்டனென்ஸ் கட்டண வசூல் ரூ.20 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், குடியிருப்பாளர்கள் செலுத்தும் மெயின்டனன்ஸ் கட்டணங்கள் ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்படும். குடியிருப்பாளர்கள் மாத மெயின்டனன்ஸ் கட்டணமாக ரூ.7,500-க்கு மேல் செலுத்தினாலும் இந்த விலக்கு கிடைக்கும்.
ஒரு உறுப்பினருக்கான மெயின்டனன்ஸ் கட்டணம் ரூ.7,500-ஐ விட அதிகமாகவும், குடியிருப்பு நலச் சங்கத்தின் வருவாய் ரூ.20 லட்சத்தை விட அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் மெயின்டனன்ஸ் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. மெயின்டனன்ஸ் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18% ஆகும்.
இந்த வரி விதிப்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல அப்பாரட்மென்ட் அசோசியேஷன்கள் ஜிஎஸ்டி பதிவு செய்வது குறித்தும், அதன் அவசியம் குறித்து ஆலோசனைகளையும் மற்றும் கூட்டங்கள் நடத்தி வருகின்றது.
ஜிஎஸ்டி-யில் செலுத்த அசோசியேஷன் பதிவு செய்யப்பட்டால் மாதம் இரண்டு முறை வருமான அறிக்கையும் மற்றும் ஆண்டு வருமானம் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். இந்த மெயின்டனன்ஸ் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி விகிதம் 5% என்று பலர் தவறாக நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் இது 18% என்பது தான் இந்த பதிவு மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜிஎஸ்டி செலுத்த அப்பார்ட்மென்ட் அசோசியேஷன்-களுக்கு உள்ளீட்டு வரி அதாவது இன்புட் டாக்ஸ் கோரலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தற்போது இந்த ஜிஎஸ்டி விதிமுறை காரணமாக, தங்கள் மாத மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகரிக்கும் என்று கவலைப்படுகின்றனர்.
குறிப்பாக, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு இது பெரும் சுமையாக அமையும். இதனால், அரசாங்கம் இந்த விதிமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ஜிஎஸ்டி விதிமுறைகள், குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். ஆனால், இது குடியிருப்பாளர்களின் மாத செலவுகளை அதிகரிக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications