2024-25 நிதியாண்டிற்கான நிதி மசோதா 45 திருத்தங்களுடன் லோக்சபாவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி தொடர்பான முக்கியமான திருத்தம் இடம்பெற்றுள்ளது அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். திருத்தப்பட்ட நிதி மசோதாவை தாக்கல் செய்துவிட்டுப் பேசி மத்திய நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் நடுத்தர வர்க்கத்திற்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான வரி விவாதத்திற்குப் பதில் அளித்தார்.
சுகாதார காப்பீட்டின் மீதான 18 சதவிகித GST-யை நீக்குமாறு கோரியுள்ள மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியின் கடிதத்திற்குப் பதிலளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதின் கட்காரியின் கடிதம் பொதுவெளியின் வாயிலாக வந்த காரணத்தால் நாடாளுமன்றத்தில் 200 உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர்.

இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நான் இரண்டு விஷயத்தைக் கூற விரும்புகிறேன், மருத்துவ காப்பீட்டில் வரி விதிப்பு என்பது GST அறிமுகத்திற்கு முன்பே இருந்தது. GST அறிமுகத்திற்கு முன்பே மருத்துவ காப்பீட்டின் மீது மாநில அரசுகளும் வரியை வசூலித்துள்ளது. எனவே இது புதிய பிரச்சனை அல்ல, அது அனைத்து மாநிலங்களிலும் இருந்தது. இங்கு போராட்டம் நடத்துபவர்கள்... தங்கள் மாநிலங்களில் இந்த வரியை நீக்குவது பற்றி விவாதித்தார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது கடிதத்தின் வாயிலாக, சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கான பிரீமியத்தில் விதிக்கப்படும் GST-யை திரும்பப் பெற வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் நிதின் கட்காரி வலியுறுத்தினார். இது காப்பீட்டுதாரர்களின் வரிச்சுமையைக் குறைத்து, நாட்டு மக்கள் காப்பீட்டு பாதுகாப்பு அதிகம் பெற வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
நாக்பூர் LIC யூனியன் சார்பாக நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம் எழுதினார், "ஆயுள் காப்பீடு பிரீமியத்தில் விதிக்கப்படும் மறைமுக வரி வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை மீது வரி விதிப்பதாகும்" என்று கூறினார்.
இந்தியாவில் காப்பீட்டு துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. பொருளாதார ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீடு பங்களிப்பு 2023ஆம் நிதியாண்டில் 3.8 சதவிகிதமாக இருந்தது, இது 2035ஆம் நிதியாண்டில் 4.3 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வருடத்திற்கு 6.7 சதவிகித வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாகத் தனிநபர் காப்பீடு தேவை அதிகரிப்பு, இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் காப்பீட்டு தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் ஆகியவை விளங்குகிறது. இந்த வளர்ச்சி போக்கு, காப்பீட்டு துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications