இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் வணிக சூழல் மற்றும் டிஜிட்டல் நிதி பரிமாற்றங்களுக்கு மத்தியில், மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரி பரிந்துரை, வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி நிதியமைச்சர் ஆதிஷி, சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சகத்தின் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில் நிதியமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மத்திய நிதித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் 2000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கான பரிவர்த்தனை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய ஜிஎஸ்டி வரி பரிந்துரையில், 2,000 ரூபாய்க்கும் குறைவான பேமெண்ட் கேட்வே வாயிலான ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் மீது 18% வரி விதிக்க முன்மொழிந்துள்ளது. இதுவரை இந்த பரிவர்த்தனைகளுக்கு முழு ஜிஎஸ்டி விலக்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களைப் பாதிக்கும் என்று டெல்லி நிதியமைச்சர் ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இதன் விளைவாக, நாட்டின் தொழில்முனைவோர் சமூகத்தின் மீது அதிகப்படியான நிதி சுமை உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் ஜிஎஸ்டி அமைப்பிடம் இருந்து சில முன்னணி பேமெண்ட் கேட்வே நிறுவனங்களும் 2000 ரூபாய்க்குக் கீழ் செய்யப்பட்ட பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதான் இந்த பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளியாக உள்ளது, இதுகுறித்த இறுதி முடிவு இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு 2017ல் 2000 ரூபாய்க்குக் குறைவான தொகையை பேமெண்ட் கேட்வே வாயிலாகச் செலுத்தும் போதும் ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்க உள்ளதாக அறிவித்தது.
இந்தியாவில் சிறு வணிகங்கள் பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்கின்றன, சரியாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 30 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில் 62 சதவீதத்தை இத்துறை பங்களிப்பு அளிக்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த டெல்லி நிதியமைச்சர், "பேமெண்ட் கேட்வே வாயிலாகச் சிறு பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது ஏராளமான சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பாதிக்கும்" என்று கூறினார்.
மேலும் பேசிய ஆதிஷி, "நாம் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் ஏதாவது வாங்கும்போது, நம்முடைய பரிவர்த்தனை அளவு 2,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அது ஜிஎஸ்டிக்கு வரி விலக்கு பெற்று இருக்கும். இதேபோல் பரிவர்த்தனை தொகை 2,000 ரூபாயை தாண்டினால், அதற்கு பணப்பரிமாற்ற கட்டணத்தின் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்" என்று கூறினார்.
இந்த நிலையில் 2000 ரூபாய்க்கு குறைவான பேமெண்ட்-க்கும் 18 சதவீத ஜிஎஸ்டி கொண்டு வருவது மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பணமில்லாத பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாக கூறுவதில் இருந்து முரண்படுகிறது என்றும் டெல்லி நிதியமைச்சர் ஆதிஷி சுட்டிக்காட்டினார். மேலும் இதற்கான முடிவு இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications