1 ரூபாய்க்கு 10 கோடி ரூபாய்.. அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கும் ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத்தின் மீது யாருக்கு தான் ஆசை இருக்காது, இந்தப் பணத்தைச் சம்பாதிக்கத் தான் வருடம் முழுவதும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.

 

ஆனால் ஈசியாகக் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் அதிகமாக வேண்டும்.

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பழைய பொருட்களுக்கு எப்போதுமே ஒரு டிமாண்ட் உள்ளது, குறிப்பாக வெளிநாட்டில் பழைய பொருட்களை ஏலம் விட்டு பல கோடி ரூபாயம் சம்பாதிக்கின்றனர்.

ஜப்பான் சரக்குப் பாட்டில்

ஜப்பான் சரக்குப் பாட்டில்

உதாரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் பழமையான மதுபான நிறுவனத்தின் ஒரு பாட்டில் சரக்கு பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

பழைய நாணயங்கள்

பழைய நாணயங்கள்

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது பழைய நாணயங்களுக்கான டிமாண்ட், வர்த்தகம் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இணையத்தில் பல லட்ச ரூபாய்க்கும், சில நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

5 ரூபாய் நோட்டு
 

5 ரூபாய் நோட்டு

உதாரணமாக உங்களிடம் பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைப் புகைப்படம் எடுத்து ஈகாமர்ஸ் தளத்தில் அப்லோடு செய்தாலே போதும், விருப்பப்படுவோர் அதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு வாங்கிச் செல்வார்கள். இதற்காக நீங்கள் தனியாக எவ்விதமான நிறுவனத்தில் முதலீடு செய்ய தேவையில்லை.

 ஒரு ரூபாய் நாணயம்

ஒரு ரூபாய் நாணயம்

அப்படி இந்தியாவில் தற்போது பழைய ஒரு ரூபாய் நாணயம் தற்போது பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது. உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியின் பெட்டியில், பீரோவில், அல்லது பரன் மீது இருக்கும் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயம் உங்களுக்குப் பல கோடி ரூபாயை சம்பாதித்துக் கொடுக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

1885 ஒரு ரூபாய் நாணயம்

1885 ஒரு ரூபாய் நாணயம்

சமீபத்தில் 1885 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எப்படி விற்பனை செய்வது

எப்படி விற்பனை செய்வது

இதேபோன்ற நாணயம் உங்களிடம் இருந்தால் நீங்களும் பல கோடி ரூபாய் பெறும் வாய்ப்பை பெறலாம். இத்தகைய விற்பனையை நீங்கள் www.indiamart.com தளத்தில் செய்ய முடியும், இத்தளத்தில் ஒரு கணக்கை திறந்து உங்களிடம் இருக்கும் நாணயத்தைப் புகைப்படம் எடுத்து, அப்லோடு செய்தால் போதும்.

இந்தியாமார்ட்

இந்தியாமார்ட்

இந்தியாமார்ட் தளமே உங்களுடைய பொருளை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்யும். இந்தப் பணியில் விருப்பப்படுவோர் உங்களின் நாணயத்திற்கு விலையைக் கோருவார், விருப்பம் இருப்பின் தொகையைக் கொடுத்துவிட்டு நாணயத்தை விற்பனை செய்யலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் ஒரு தனி எச்சரிக்கை விடுத்தது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு வருகிறது.

மோசடி

மோசடி

பல்வேறு ஆன்லைன் / ஆப்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில் பொதுமக்களிடம் கட்டணம் / கமிஷன் / வரி கோரப்பட்டு வருகிறது. இதுபோன்ற இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் கட்டணம் அல்லது கமிஷன்களைக் கோருவதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.

1880ல் தயாரிக்கப்பட்ட லெவி ஜீன்ஸ்.. இன்று என்ன விலை தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1885 British era 1 rupee COIN can get 10 CRORE through online auction

1885 British era 1 rupee COIN can get 10 CRORE through online auction
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X