1880ல் தயாரிக்கப்பட்ட லெவி ஜீன்ஸ்.. இன்று என்ன விலை தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனமான லெவி ஜீன்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் அதாவது 1880 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ்கள் பயன்படுத்தப்படாத சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த ஜீன்ஸ்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜீன்ஸின் ஏலத்தொகை எவ்வளவு? இந்த ஜீன்ஸை ஏலத்தில் வாங்கியவர் யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அடுத்தடுத்து திவாலாகும் ஜீன்ஸ், டெனிம் நிறுவனங்கள்.. காரணம் என்ன..?அடுத்தடுத்து திவாலாகும் ஜீன்ஸ், டெனிம் நிறுவனங்கள்.. காரணம் என்ன..?

லெவி ஜீன்ஸ்

லெவி ஜீன்ஸ்

அமெரிக்காவில் கடந்த 1853 ஆம் ஆண்டு லெவி ஸ்ட்ராஸ் என்பவர் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான லெவி ஸ்ட்ராஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஜெர்மனியை பூர்வீகமாக கொண்ட லெவி ஸ்ட்ராஸ் நிறுவனத்தை தொடங்கிய பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். இந்நிறுவனம் தற்போது உலக அளவில் புகழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1880ல் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ்

1880ல் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ்

இந்த நிலையில் சமீபத்தில் பயன்படுத்தப்படாத அமெரிக்க சுரங்கம் ஒன்றில் பழைய ஜீன்ஸ்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது. லெவி ஜீன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஜீன்ஸ்கள் 1880களில் அதாவது லெவி கம்பெனி ஆரம்பித்த காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம்

ஏலம்

இந்த ஜீன்ஸ்களை ஏலம் விட தனியார் ஏல நிறுவனம் ஒன்று முடிவு செய்த நிலையில் இந்த ஜீன்ஸ்கள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஜீன்ஸ் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த ஜீன்ஸை வாங்கியவர்கள் ஏலத்தின் பிரீமியம் கட்டணத்தையும் சேர்த்து மொத்தம் 87,400 அமெரிக்க டாலர்கள் செலுத்தியுள்ளனர்.

ஏலம் எடுத்தது யார்?

ஏலம் எடுத்தது யார்?

பழமையான ஆடைகளை சேர்க்கும் ஆர்வலர்களான Kyle Haupert மற்றும் Zip Stevenson ஆகிய இருவரும் இணைந்து இந்த ஒரு ஜோடி ஜீன்ஸை ஏலம் எடுத்துள்ளனர். இந்த ஜீன்ஸ்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

140 வருடங்கள் பழமையானவை

140 வருடங்கள் பழமையானவை

சுமார் 140 வருடங்களுக்கு முந்தைய இந்த பழமையான ஒரு ஜோடி ஜீன்ஸ்கள் ஒருசில துளைகள் மற்றும் பிளவுகளை தவிர அப்படியே உள்ளது. லெவி ஜீன்ஸ் தயாரிப்பு எந்த அளவுக்கு உழைக்கும் என்பதற்கு இந்த ஜீன்ஸ்கள் சான்று என லெவி ஜீன்ஸ் நிறுவனம் விளம்பரம் செய்யும் அளவுக்கு இந்த ஏலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Levi's jeans from the 1880s was auctioned for Huge amount

140 years old pair r of Levi's jeans sold for $76,000 at an auction in New Mexico. The buyer, however, had to pay $87,400 with a buyers premium factored in.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X