மும்பையில் சமீபத்தில் முக்கிய பேசு பொருளாக இருப்பது பிரபல தென்னிந்திய உணவகமான ராமேஸ்வரம் கஃபே தான். ஒட்டுமொத்த மும்பையும் ராமேஸ்வரம் கஃபே எப்படியாவது ஒரு நெய் பொடி மசால் தோசையை சாப்பிட வேண்டும் என வரிசை கட்டி நிற்கின்றனர். பெங்களூர் பெரும் புயலை ஏற்படுத்திய ராமேஸ்வரம் கஃபே தற்போது மும்பையில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தென்னிந்திய உணவு விரும்பி, முக்கியமாக இவருக்கு மும்பை உடுப்பி ஹோட்டலில் உணவு என்றால் ரொம்பவும் பிடிக்கும் என பல முறை கூறியுள்ளார்.

கல்லூரி நாளில் இருந்து இன்று வரையில் மும்பை உடுப்பி ஹோட்டலில் சாப்பிட்டு வருகிறார், சமீபத்தில் நடந்த அனந்த் அம்பானி திருமணத்தில் கூட மும்பை உடுப்பி ஹோட்டல் உரிமையாளர் கலந்துக்கொண்டார்.
இப்படிப்பட்ட முகேஷ் அம்பானி கர்நாடக உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வை விட்டு வைப்பாரா. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் அம்பானி குடும்பம் 10-15 கார்களில் பாதுகாப்பு படை சூழல ராமேஸ்வரம் கஃபே வந்தனர். இதை ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெர்ச்சண்டுடன் சாப்பிட சென்றுள்ளார். அம்பானி குடும்பத்தின் வருகை சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உணவகத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்களை தாண்டி அம்பானி குடும்பம் உள்ளே சென்றது.
இந்த இன்ஸ்டா வீடியோவை பிரஃபுல் பைதானே ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தார். வீடியோவில் அம்பானி குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர்-ம் இருந்தார்.

உணவகத்துக்கு வெளியே அம்பானி குடும்பத்தினர் வந்த கார்கள் வரிசை கட்டி நிறுத்தப்பட்டு இருந்தன. முகேஷ் அம்பானி வீக்கெட் உடையில் ஜாலியாக மகன், மருமகன் உடன் வந்து சாப்பிட்டது பார்க்க ஜாலியாக இருந்தாலும் இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரம் கஃபே-வில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்களை தாண்டி அம்பானி குடும்பம் சென்றதும், அவர்களின் பாதுகாப்புக்காக வந்த ஏராளமான பாதுகாவலர்கள் மூலம் ஹோட்டலில் சலசலப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு ஒரு பயனர் "சில நாட்களுக்கு முன்பு இந்த உணவகம் அனைவருக்கும் சமமான வரிசை மற்றும் சேவை என்று பதிவு செய்யப்பட்டது. இப்போது இது என்ன?" என்று குறிப்பிட்டார். இது உணவகத்தின் சாதாரணமான சேவை மற்றும் உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை என்ற விவாதத்தை தூண்டியுள்ளது. ராமேஸ்வரம் கேஃப் மும்பையின் சர்ச்கேட் பகுதியில் புதிதாக திறந்துள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications