பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் விலை குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். உலக சந்தையில் புவிசார் பதற்றங்கள் தொடரும் நிலையில், தங்கம் விலை சர்வதேச அளவில் நிலைத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கேஷ் பற்றாக்குறை காரணமாக சில வகைகளில் தங்கம் சிறிது டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. ஆனால் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது.

சென்னை விலை நிலவரம்
இன்று சென்னை ரீடைல் சந்தையில் 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹16,495 ஆக இருந்து ₹87 குறைந்துள்ளது. அதேபோல் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹15,120 ஆகவும், ₹80 வரை சரிவை கண்டுள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹13,039 ஆக உள்ளது, இன்றைய வர்த்தகத்தில் ₹61 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
மேலும் வெள்ளி விலை ரீடைல் சந்தையில் எவ்விதமான மாற்றமின்றி ஒரு கிராமுக்கு 295 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ₹2,95,000 ஆகவும் உள்ளது. இதற்கிடையில் பிளாட்டினம் விலை உயர்வை பதிவு செய்து, ஒரு கிராமுக்கு 89 ரூபாய் உயர்ந்து 6,399 ரூபாயும், 10 கிராமுக்கு 890 ரூபாயும் 63,990 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தற்போது நிலைத்திருக்கிறது என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கேஷ் மார்க்கெட்டில் பற்றாக்குறை இருப்பதால், தங்கம் சற்று டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் டாலர் மதிப்பு உயர்ந்த பின்பும் தங்கம் விலை உயராமல் தொடர்ந்த மந்த நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது.
இன்று தங்கம் விலை கிராமுக்கு 90 வரை குறைந்து காணப்படுகிறது, இதன் மூலம் 24 கேரட் தங்கம் விலை 16,495 ரூபாய்க்கும், 18 கேரட் தங்கம் 61 ரூபாய் குறைந்து 13,039 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருவதாக தெரிவித்துள்ளார். இந்த ரேஞ்சில் தான் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் வர்த்தகம் நடைபெறும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். சர்வதேச அளவில் தங்கம் நிலைத்திருக்கும் போது, இந்தியாவில் இந்த டிஸ்கவுண்ட் முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாக உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலை குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் முக்கியமாந ஐடியாவை மக்களுக்கு அளித்துள்ளார். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆனால்இந்தியாவில் "வெள்ளி விலை மாற்றமில்லை" என்று சொல்லப்படுகிறது, ஆனால் உண்மையில் சரிவடைந்துள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெள்ளி வாங்க விரும்புவோருக்கு, கடைக்கு சென்று 'வெள்ளி விற்கிறேன்' என்று சொல்லி, கடைக்காரன் வாங்கும் விலையில் வெள்ளி வாங்க வேண்டும் என்று கூறினார். அது தான் உண்மையான வெள்ளி விலை என்று அவர் வலியுறுத்தினார். எனவை சந்தை விலையில் வாங்குவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அது லாபமில்லாத விலை என ஆனந்த் ஸ்ரீனிவாசன் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
சர்வதேச சந்தை விலை
இன்று அமெரிக்க சந்தையின் வர்த்தகம் துவங்கிய பின்பு சர்வதேச சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறைந்துள்ளது, இதனால் நாளையும் இந்திய சந்தையில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை தற்போது 5,101.18 டாலராக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 40.13 டாலர் குறைந்துள்ளது. இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் வெள்ளி விலை 0.89% குறைந்து 82.7920 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 91.55 என்ற அளவில் வர்த்தகமாகிறது. காலையில் 92.30 வரை வலுவடைந்தது, நேற்று 92.41 என்ற நிலையில் இருந்தது. ரூபாய் பலவீனமடையும் போது தங்கம் விலை உயரும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். ஆனால் இந்திய சந்தையில் நிதி பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் தங்கம், வெள்ளி மீதான டிமாண்ட் குறைந்து ப்ரீமியம் விலையில் இருந்து உண்மையான விலைக்கு வருவந்துக்கொண்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் மோசமான சூழ்நிலையை (worst case scenario) விவரித்துள்ளார். தற்போது 83-85 டாலர் அளவில் வர்த்தகமாகிறது. ஈரான் மீதான போர் தொடர்ந்தால் 150 டாலர் வரை உயரலாம் என்று அவர் எச்சரித்தார்.
கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலர் விலை உயர்வுக்கும் இந்தியாவுக்கு கூடுதல் 2 பில்லியன் டாலர் செலவு ஏற்படும். இது இறக்குமதி செலவை அதிகரித்து, பணவீக்கம், உற்பத்தி செலவு உயர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தியாவுக்கு இது பெரும் பின்னடைவாக மாறும் என்றும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார். இறக்குமதி மட்டுமல்ல, ஏற்றுமதி துறைகளும் பாதிக்கப்படும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?



Click it and Unblock the Notifications