இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானில் கூட்டு ராணுவ நடவடிக்கையை தொடங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. இன்னமும் போர் பதற்றும் கொஞ்சம் கூட தணியவில்லை. இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் ஈரானும் பதில் தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருக்கக்கூடிய ஈரான் ராணுவம் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. அண்டை நாடுகளில் இருக்கக்கூடிய கட்டடங்கள் மீதும், அமெரிக்க தூதரகங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திய வண்ணம் இருக்கிறது. இந்த தாக்குதலால் துபாய் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுல்ளது. துபாயின் புகழ்பெற்ற மரினா வானுயர கட்டடத்தின் மீது ஈரான் குண்டு வீசியதில் அங்கே பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சூழலில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என இந்தியா டாட் காம் செய்தி குறிப்பிடுகிறது. சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் தங்களுடைய உணவு தேவைகளை பெரும்பாலும் இறக்குமதி மூலமாக தான் நிறைவேற்றிக் கொள்கின்றன. அதாவது இந்த நாடுகளுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் நாடுகளுக்கு தேவையான 70% உணவு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் மூலம் தான் கொண்டுவரப்படுகிறது. ஆனால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியே உணவு கொண்டு வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு வார காலமாக எந்த கப்பலும் இந்த ஜலசந்தியை கடக்கவில்லை.
அதே வேளையில் தொடர்ச்சியாக நடத்தக்கூடிய ட்ரோன் தாக்குதல், ஏவுகணை வீச்சு உள்ளிட்டவை காரணமாக வளைகுடா நாடுகள் முழுவதுமே விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் விமானங்கள் வழியாக உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதும் தடைப்பட்டு இருக்கிறது.

பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரையிலான காலகட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் விமானம் மூலம் சரக்கு போக்குவரத்து என்பது 22 சதவீதம் குறைந்திருக்கிறதாம். தற்போது கடல் மார்க்கமாகவும் உணவு கொண்டு வர முடியவில்லை விமான மூலமாகவும் கொண்டுவர முடியாத நிலை என்பதால் துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்கறி, பழங்கள், பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஸ்டீஃபன் பால் என்ற லாஜிஸ்டிக் பிரிவு நிபுணர் எஸ்ஆர்எப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் துபாயில் மார்ச் 5ஆம் தேதி நிலவரப்படி 10 நாட்களுக்கான பிரஷ்ஷான உணவுப் பொருட்கள் மட்டுமே இருக்கிறது என்றார். இன்றைய தேதி பார்த்தால் இன்னும் அங்கே 7 நாட்களுக்கு மட்டுமே பிரஷ்ஷான உணவு பொருட்கள் கிடைக்கும், அதற்கு நிலைமை சீராகவில்லை என்றால் காய்கறி, பழங்கள், பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
இருந்தாலும் துபாயில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்கனவே தானியங்கள் மற்றும் ஃபுரோசன் உணவுகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் இருப்பு வைத்திருப்பதாகவும் பிரஷ்ஷான பொருட்களுக்கான விநியோகம் குறைந்தாலும் இந்த பொருட்களை விநியோகம் செய்து அவற்றை சரி செய்து விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே லூலூ குழுமம் இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு 80,000 கிலோ எடை கொண்ட பிரஷ் காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்திருக்கிறதாம்.
More From GoodReturns

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!



Click it and Unblock the Notifications