பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஆண்டு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிப்பதால் அதற்கான சார்ஜிங் செய்யும் நிலையங்களும் அதிகரிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று.
அந்த வகையில் இந்தியாவில் தற்போது 25 மாநிலங்களில் 68 நகரங்களில் 2,877 புதிய எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஃபேம் இந்தியா
கனரக தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் 2,877 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை ஃபேம் இந்தியா அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்
மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது என கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1,576 எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன.
1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல்கட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை 479 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கூடுதலாக ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ஏப்ரல் 1, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
6,315 எலக்ட்ரிக் பஸ்கள்
ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஜூலை 15 வரை 4.7 லட்சம் மின்சார வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், 65 நகரங்களுக்கு 6,315 எலக்ட்ரிக் பஸ்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு ஏற்ப நாட்டில் மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு
எலக்ட்ரிக் வாகங்களுடன் தொடர்புடைய உள் எரிப்பு இயந்திரங்களுடன் (ICE) ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் அதிக முன்கூட்டிய செலவுகள் மற்றும் சில அம்சங்கள் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களால் ஏற்படும் சவால்களை மனதில் வைத்து, அந்த சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார்
மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, '25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார சார்ஜ் நிலையங்களுக்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்றும், எதிர்காலத்தில் தேவையின் அடிப்படையில் இன்னும் அதிகமான அளவில் எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications