மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளன. இருப்பினும் இந்த குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தங்களது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுத் தந்துள்ளன. முதலீட்டு நிபுணர்கள் இவற்றை BULLET PROOF பங்குகள் என அழைக்கின்றனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டாடா குழுமத்தை சேர்ந்த பங்கு.
டாடா குழுமத்தில் சில்லறை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம் டிரெண்ட் (Trent). இந்த நிறுவனத்தின் கீழ் தான் வெஸ்ட்சைடு, ஸூடியோ ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. ட்ரெண்ட் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஒரு பங்கு மதிப்பு 148.78 ரூபாயாக இருந்தது.

அதுவே தற்போது கிட்டத்தட்ட 4 ,920 ரூபாய் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 3,241% லாபத்தை பெற்று தந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 126.27% உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் 2018 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் குறைந்தபட்சமாக வெறும் 7% லாபத்தை மட்டுமே தந்துள்ளது.
ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வை பொருத்தவரைக்கும் ட்ரெண்ட் தற்போது பல்வேறு இடங்களில் தங்களது கடைகளை விரிவாக்கம் செய்வது மற்றும் மக்களின் தேவைக்கேற்ப அப்டேட் செய்வது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருவதால் நல்ல வளர்ச்சி அடையும் என கணிப்பு தெரிவித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ட்ரெண்ட் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சியை அடையும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸூடியோ என்ற பிராண்ட் ட்ரெண்டின் பங்கு மதிப்பை பல மடங்கு உயர்த்தும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.
இந்தியாவில் ரீடெய்ல் சந்தை என்பது 5 லட்சம் கோடி மதிப்பு கொண்டது, இது ஆண்டுதோறும் 15% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே இந்த சந்தையில் ட்ரெண்டின் சந்தை மதிப்பு என்பது 2-8% வரை இருக்கிறது. எனவே வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் நல்ல வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது.
எலண்டாஸ் பெக் (Elantas Beck) கடந்த 10 ஆண்டு காலத்தில் 1035 % லாபத்தை பெற்று தந்துள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ரசாயன தயாரிப்பு நிறுவனம் இது.
எலண்டாஸ் பெக்கை பொறுத்தவரை இதன் ஒரு பங்கின் மதிப்பு 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி 988 ரூபாயாக இருந்தது, தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 11,288 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அதிகபட்சமாக 95.34 % லாபத்தையும் குறைந்தபட்சமாக 2018 ஆம் ஆண்டு 0.9% லாபத்தையும் தந்தது. வருங்காலங்களிலும் இது நல்ல வளர்ச்சியை தரும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications