மும்பை: தங்கத்தின் தேவையை மக்களே முன்வந்து குறைக்க வேண்டும். அதற்கு தங்கத்தின் மீதான மோகமத்தை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவை குறையும் என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கே.சி.சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தங்கத்தின் மீதான மக்களின் சமூக, கலாச்சார பார்வையில் பெரும் மாற்றம் தேவை. தங்கத்தின் மீதான மோகத்தை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவை குறையும், விலையும் குறையும்.
அப்படி விலை குறையும்போது அதிக அளவிலான மக்கள் தங்கத்தைப் பயன்படுத்தவும் முடியும்.
தற்போது 90 சதவீத தங்கத்தின் பயன்பாடானது நகைகள் மற்றும் கடவுளுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காகவே தேவைப்படுகிறது. இதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. வேறு வழியே இல்லை என்றார் அவர்.
Share This Article
English summary
"Need shift in people's attitude to cut gold demand" | தங்கத்தின் மீதான மோகத்தை மக்கள் கைவிட வேண்டும்..!
A big shift is needed in people's social and cultural attitudes towards gold to cut its demand, which in turn will help ease the current account situation, Reserve Bank Deputy Governor K C Chakrabarty has said. "Ninety per cent of the gold demand is jewellery or to offer to God. Both have to stop," Chakrabarty said, while speaking at an event here over the weekend.
Story first published: Monday, July 23, 2012, 12:45 [IST]
Other articles published on
Jul 23, 2012