எங்கேயோ போயிருச்சே தங்கம் விலை...ஒரு பவுன் ரூ. 23,240!

தங்கத்திற்கு எப்போதுமே கிராக்கிதான். எது இருக்கிறதோ, இல்லையோ, குண்டுமணி தங்கமாவது இருந்தால்தான் மக்களுக்கு சற்று நிம்மதி. ஆனால் அதைக் கூட வாங்க முடியாத அளவுக்கு விலை படு வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது.
தங்கத்தின்விலை எப்போதோ பவுன் 20 ஆயிரம் என்ற நிலையைத் தாண்டி விட்டது. இப்போது 25,000 என்ற நிலையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலையில் ரூ. 288 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 23,240க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2905 ஆக இருந்தது
தற்போது ஆவணி மாதம் நடக்கிறது. எங்கு பார்த்தாலும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் களை கட்டியுள்ளன. இதனால் தங்கத்தின் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதுவே விலை உயர்வுக்குக் காரணமாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications