பென்னாகரம்: பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் தங்கப்புதையல் எடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் சின்னப்பநல்லூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது விளை நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடம் நிறைய தங்கநாணயங்கள் சிக்கியதாகவும் வருவாய்த்துறையினருக்கு ராஜா என்பவர் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சின்னப்பநல்லூருக்கு நேற்று நேரில் சென்று வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் புதையல் கிடைத்ததாகக் கூறப்பட்ட விளைநிலத்தையும் பார்வையிட்டனர். அந்த நிலத்தில் சில இடங்களில் தோண்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனால் நிலத்தை மேம்படுத்தவே தாங்கள் தோண்டியதாக நில உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறத். ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் அவ்வப்போது புதையல் கிடைப்பதும் உண்டு. அதை பதுக்கி வைப்போரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications