2011-ம் ஆண்டில் 969 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிலோ குறைவான அளவுதான் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை, விலை உயர்வு போன்றவற்றால் தங்கத்தின் தேவை குறைந்து போயுள்ளது. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் இறக்குமதி இன்னும் சற்று அதிகரிக்கலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். அதாவது தங்க இறக்குமதி அளவு 800 டன்னாக இருக்கலாம்.
இதேபோன்ற நிலைமையே சீனாவிலும் இருப்பதாக சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவைவிட 20 டன் தங்கத்தையே அந்நாடு கூடுதலாக இறக்குமதி செய்திருக்கிறது.