57வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை
ஹைதராபாத்: தி யுனைடெட் ப்ரூவரீஸ் குழும தலைவர் விஜய் மல்லையா தனது பிறந்தநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

தி யுனைடெட் ப்ரூவரீஸ் குழும தலைவர் விஜய் மல்லையா இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவர் தனது பிறந்தநாளையொட்டி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு சென்றார்.  அங்கு அவர் தனது கையாலேயே 3 கிலோ தங்கத்தை கடவுளுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்.

இது குறித்து கோவில் அதிகாரி ரமணா கூறுகையில்,

கர்ப்ப கிரத்திற்கு செல்லும் வழியில் உள்ள கதவுக்காக விஜய் மல்லையா 3 கிலோ தங்கத்தை அளித்தார். அதற்குரிய ரசீது அவரிடம் கொடுக்கப்பட்டது என்றார்.

படாடோபமாக வாழ்வதற்கு பெயர் பெற்றவர் விஜய் மல்லையா. இந்த பக்கம் ஒரு மாடல், அந்த பக்கம் ஒரு மாடல் என்று பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தான் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நொடித்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் அவரது மதுபான நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் 53 சதவீத பங்கை ரூ11,166 கோடிக்கு வாங்கியது ஜானி வாக்கர் விஸ்கியை தயாரிக்கும் டியாகோ.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

On his birthday, Vijay Mallya donates 3 kg gold to Tirupati temple | பிறந்தநாள்: திருப்பதி கோவிலுக்கு விஜய் மல்லையா 3 கிலோ தங்கம் காணிக்கை

Vijay Mallya, the Chairman of the United Breweries Group donated 3 kg gold at the Tirupati temple on his 57th birthday.
Story first published: Tuesday, December 18, 2012, 15:03 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns