தங்க நகைகள் மீதான கடன் தொகையைக் குறைக்கும் நிறுவனங்கள்

தங்க நகை மீதான கடன் தொகையை குறைக்கும் நிறுவனங்கள்
சென்னை: தங்கத்தின் விலை குறைந்ததன் காரணமாக ஒரு பக்கம் மக்கள் நகைக் கடைகளை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் இந்த விலை குறைவு நிரந்தரமல்ல என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதன் காரணமாக தங்கம் மற்றும் தங்க நகைகள் மீது கடன் வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்கத்திற்கு வழங்கும் கடன் தொகையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் இந்த கூட்டமைப்பு, தங்கத்தின் விலை நிலவரத்தை தொடர்ந்து ஆய்வு செய்து அதற்கு ஏற்ப தங்கத்திற்கு வழங்கும் கடன் தொகையை நிர்ணயம் செய்ய இருப்பதகாவும் தெரிவித்திருக்கிறது.

எனினும், தங்கத்தின் விலைக் குறைந்த போதிலும் தங்கத்தின் தேவை இன்னும் குறையவில்லை என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும் தங்கக்தின் மீது வழங்கும் கடன் தொகைக் குறைந்தாலும், தங்கத்தின் மீது கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இதற்கு முன்பு தங்கத்திற்கு அதிகமாக வழங்கப்பட்டக் கடன் தொகை சரியாகத் திரும்ப வசூல் செய்யப்படுகிறது என்பதையும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் தங்க நகைகளுக்கு கடன் வழங்குவதில் முதல் இடம் தருவதாக ஒரு முன்னணி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏனெனில் அதில் சிரமம் குறைவு என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் நகைக்குக் கடன் வழங்கிய நிறுவனங்கள் அதை உரிய காலத்தில் வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வசூல் செய்யப்படாத பணத்தைப் பெறுவதில் கவன் செலுத்த வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+