2006ல் இருந்து இன்று வரை: தங்கம் விலை, ஒரு பார்வை!

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் கடந்த 2006ம் ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ. 8400க்கு விற்கப்பட்டது. ஆனால் அதே 10 கிராம் தங்கம் இந்த ஆண்டு தொடக்கத்தில் 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.27,000க்கு விற்கப்பட்டது. ஒரு சில சொத்துக்கள் மட்டுமே இவ்வாறு 7 ஆண்டுகளில் 300 சதவீத லாபத்தைத் தரும்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து எவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது என்பதைப் பார்ப்போம். மேலும் உலக தங்கத்தின் விலையை வைத்தே இந்தியாவிலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2008
 

2008

2008ம் ஆண்டு இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.12,500க்கு விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக லீமன் பிரதர்ஸ் நிறுவனம் திவால் மற்றும் உலக அளவில் பொருளாதார மந்தம் காரணமாக தங்கத்தின் விலை எகிற ஆரம்பித்தது. உலக அளவில் பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால் உலக அளவிலும் மற்றும் இந்திய அளவிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

2009

2009

2009 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15000க்கு தாவியது. உலக அளவிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. குறிப்பாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார சரிவு போன்றவை இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

2010

2010

2010 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இந்தியாவில் ஒரு படி உயர்ந்து ரூ.18,000க்கு(10 கிராம்) விற்கப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி பலர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். மேலும் முந்தைய ஆண்டுகளில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்ட சரிவும், முதலீட்டாளர்களைத் தங்கத்தின் பக்கம் திருப்பியது.

2011
 

2011

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து 10 கிராம் தங்கம் ரூ.26,000க்கு விற்பனை செய்யப்ட்டது. அதற்கு முக்கிய காரணம் கிரீஸ் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி என்று கருதப்பட்டது. மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் பெரும் சரிவைச் சந்தித்ததால் பலரும் தங்கத்திலேயே அதிகமாக முதலீடு செய்தனர்.

2012

2012

2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தது. அதாவது 10 கிராம் தங்கம் ரூ.32,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் இந்திய ரூபாயின் மதிப்பும் பெருமளவில் சரிந்தது.

2013

2013

2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சற்று சரிவை சந்தித்திருக்கிறது. அதற்கு அமெரிக்காவின் பொருளாதார எழுச்சி மற்றும் அமெரிக்க பங்குச் சந்தையான டவ் ஜோன்சின் எழுச்சி மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தை வளர்ச்சி போன்றவை காரணங்களாக கூறப்படுகின்றது.

தற்போது பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். அதன் மூலம் உலக பொருளாதார மந்தம் விரைவில் நீங்கும் என்று நம்புகின்றனர். தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ. 26,000க்கு விற்பனையாகிறது. இந்த விலை கடந்த 2 ஆண்டுகளைவிட குறைவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold: A superb innings since 2006 is halted? | 2006ல் இருந்து இன்று வரை: தங்கம் விலை, ஒரு பார்வை!

Indian domestic gold which was trading at Rs 8400 per 10 grams in 2006, has more then tripled in value to the current levels of Rs 27,000 per 10 grams. Very few asset classes, can give 300% returns in 7 years. Take a look at how Indian gold prices have risen since 2008. It's important to understand that Indian gold tracks international gold prices and hence international events have a bearing on Indian prices of gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X