தங்க நாணயங்கள் விற்பனை மீது தடைவிதிக்கும் எண்ணமில்லை: ரிசர்வ் வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க நாணயங்கள் விற்பனை மீது தடைவிதிக்கும் எண்ணமில்லை: ரிசர்வ் வங்கி
சென்னை: ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளின் தங்க விற்பனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அது நிதியாளர்களை, மிகத் தீவிரமாக தங்க விற்பனையை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

( Cibil marketplace: Why you need to visit it before taking a loan? )

ரிசர்வ் வங்கி ஆளுநர் டி சுப்பாராவ், வங்கிகள் மூலம் நடைபெறும் தங்க நாணயங்களின் விற்பனை தடை செய்ய நினைக்கவில்லை என்று கூறினார். "வங்கிகள் மிகத் தீவிரமாக தங்க விற்பனையில் ஈடுபடுவதை விரும்பவில்லை. தங்க விற்பனை, வங்கிகளின் வணிகத்தில் ஒரு அங்கமாக இருப்பதையும் விரும்பவில்லை. தங்கத்தின் மீதான கடன்கள் என்பது வங்கிகளின் வணிகத்தில் ஒரு மிகச் சிறிய பகுதி மட்டுமே" என அவர் நிதி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த போது தெரிவித்தார்.

 

அதிகரித்து வரும் தங்க தேவையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி நேற்று, வங்கிகள் மற்றும் NBFCக்கு, தங்க நாணயங்களுக்கு எதிரான கடன்கள், மற்றும் தங்க நிதிகள் மற்றும் பரஸ்பர நிதிகளின் அலகுகளுக்கு எதிராக கடன்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை விதித்தது. உண்மையான சேமிப்பு நோக்கத்திற்காக தங்கம் வாங்கும் வழி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கூறிய திரு டி சுப்பாராவ், நிதி துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக நல்லது என்பதையும் வலியுறுத்தினார். அவர் தங்கத்தின் மீதான கவர்ச்சி என்பது "அதிக பணவீக்கத்தின் பக்க விளைவு" என்றும் குறிப்பிட்டார்.

 

நிதி சேர்ப்பதற்கான தேவை பற்றி குறிப்பிட்ட ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு ரெகுலேட்டர் மற்றும் பொது கொள்கை நிறுவனம் என இரண்டு விதமான பொறுப்புகள் உள்ளது என்று தெரிவித்தார். மக்களுக்கு நிதி சேர்பதற்கான மாற்று முதலீட்டு வழிகளை அறிமுகப்படுத்துவது,மக்களை பாதுகாப்பான முறையில் முதலிடு செய்ய வழிவகுக்கும் .

மேலும் சுப்பாராவ், சில அதிக வட்டி தரும் "நேர்மையற்ற திட்டங்கள்" ரிசர்வ் வங்கியின் எந்த ஒழுங்குமுறை வரையறையின் கீழ் வருவதில்லை என்றும் அத்தகைய திட்டங்களே மக்களை அதிகம் கவர்கிறது எனவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து கிராமப்புற வாடிக்கையாளர்கள், வணிக நிருபர்கள் மற்றும் வணிக வங்கிகளின் கிராமப்புற கிளை மேலாளர்கள் உட்பட சுமார் 90 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI rules out ban on sale of gold coins

The Reserve Bank today ruled out a ban on the sale of gold by banks but asked lenders to refrain from aggressively selling the precious metal. RBI Governor D Subbarao told reporters here that the RBI did not intend to ban sale of gold coins by banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X