தங்கத்தை சேமிக்க நகைக்கடைகளின் திட்டங்கள்!!

சென்னை: மஞ்சள் உலோகமான தங்கம்,மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பழங்காலத் தொட்டே தங்கத்தை வாங்குவது என்பது ஒரு சேமிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. இத்தகைய சேமிப்பு ஆபத்து காலங்களில் அவசர தேவைகளை சமாளிப்பதற்கும் உதவுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தங்கத்தை வாங்குவதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் தங்க நகை சேமிப்பு திட்டங்கள் உதவுகின்றன. பல பிரபலமான தங்க நகை சேமிப்பு திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சில சேமிப்பு திட்டங்களை நாங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இத்தகைய திட்டங்களில் நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற இயலாது. அவற்றிற்கு பதிலாக நீங்கள் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

( How is interest and principal divided in an EMI? )

தனிஷ்க் நிறுவனத்தின் கோல்டன் ஹார்வெஸ்ட்:

தனிஷ்க் நிறுவனத்தின் கோல்டன் ஹார்வெஸ்ட்:

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சுமார் 11 மாதங்களுக்கு தனிஷ்க் நிறுவனத்தில் செலுத்த வேண்டும். 12 வது மாத தவணையை தனிஷ்க் நிறுவனமே செலுத்தி விடும். எனவே நீங்கள் சேமித்த தொகைக்கு அதிகமாகவே தங்கம் வாங்க முடியும். இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச தவணை மதிப்பு ரூ 500. அதிகபட்சமாக நீங்கள் 500ன் பெருக்கத்தில் எவ்வுளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

கீதாஞ்சலியின் தமன்னா:

கீதாஞ்சலியின் தமன்னா:

கீதாஞ்சலியின் தமன்னா சேமிப்பு திட்டம் நீங்கள் தவணை முறையில் பணம் செலுத்தி, இறுதியில் அதன் பயனை அனுபவிக்க அனுமதிக்கிறது. நீங்கள் 12 மாதங்களுக்கு தவணை செலுத்தினால் வைர நகைகள் வாங்கும் பொழுது 2 மாத தவணையும், தங்க நகைகள் வாங்கும் பொழுது 1 மாத தவணையும் இலவசமாக கிடைக்கும்.

பிசி நகைக் கடையின் 'குறைவான விலைக்கு தங்க ஆபரணங்கள்'

பிசி நகைக் கடையின் 'குறைவான விலைக்கு தங்க ஆபரணங்கள்'

பிசி நகைக் கடைக்கு 12 தவணைகள் செலுத்தினால் அடுத்த அடுத்த இரண்டு தவணைகளை இந்த நிறுவனமே செலுத்தி விடும். எனவே நீங்கள் சுமார் 1000ரூபாயை 12 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்தினால், பிசி நகைக் கடை ரூ 2,000த்தை 2 மாத தவணையாக செலுத்தி விடும். உங்களுடைய தவணை முடிந்த பிறகு 14 தவணைகளின் மதிப்புக்கு சமமான தங்கம் மற்றும் வைர நகைகளை பிசி நகைக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். வருமானத்தை பொறுத்தவரை இந்த திட்டம் வருடத்திற்கு சுமார் 25 சதவீதத்திற்கு மேல் வருமானத்தை தருகிறது.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ஸ்வர்ணநிதி

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ஸ்வர்ணநிதி

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ஸ்வர்ணநிதியின் கீழ் 18 மாதங்கள் தவணை முடிந்த பின் சந்தாதாரர்களுக்கு அவர்களுடைய முதலீடு மற்றும் சந்தா தொகையின் அளவை போன்று இரண்டு மடங்கு தொகை சேர்த்து மொத்தமாக அவர்களுடைய கணக்கில் சேர்க்கப்படும். அந்த மொத்த தொகைக்கு பிஐஎஸ் 916 ஹால்மார்க் தங்க நகை வாங்கிக் கொள்ளலாம்.

புதிய சந்தாதாரர்கள் தங்களுடைய முதல் தவணையை செலுத்திய பின் சந்தா தொகைக்கு சமமான ஒரு சிறப்பு பரிசு கிடைக்கும்.

 

TBZ நிறுவனத்தின் கல்பவிருக்ஷா திட்டங்கள்

TBZ நிறுவனத்தின் கல்பவிருக்ஷா திட்டங்கள்

தற்பொழுது நீங்கள் கல்பவிருக்ஷா திட்டத்தின் மூலம் எளிய தவணைகளில் அழகிய 22 காரட் தங்க, வைர அல்லது பிளாட்டினம் நகைகளை சொந்தமாக்கிக்க முடியும். நீங்கள் 12,15 அல்லது 18 மாதங்கள் தவணை செலுத்தினால் TBZ நிறுவனம் ஒரு மாதத் தவணையை தள்ளுபடியாக வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+