ப்ளீஸ் தங்கம் வாங்காதீங்க - நிதியமைச்சர் வேண்டுகோள்!!

ப்ளீஸ் தங்கம் வாங்காதீங்க - நிதியமைச்சர் வேண்டுகோள்!!
இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை 8 சதவீதம் அதிகரித்த பின்பு, இந்தியாவின் நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய மக்களைத் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(Gold saving schemes from jewellers: should you buy?)

"மக்கள் மத்தியில் இருக்கும் தங்கத்தின் மீதான மட்டு மஞ்சிய மோகத்தைக் குறைப்பதில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை தங்கம் வாங்க வேண்டாம் என்று வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்" என்று இந்தியன் பேங்ஸ் அசோசியசன் (ஐபிஎ) கூட்டத்தில் பேசும் போது நிதயமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

"வங்கிகள் தங்க நாணயங்களை விற்கக்கூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது. மற்ற உலோகங்களைப் போலவே தங்கமும் சமமாகக் கருதப்படும் நாள் மிக விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன். மேலும் பித்தளை மற்றும் வெண்கலம் போன்ற உலோகங்களைவிட தங்கம் சற்று அதிக பிரகாசமாக இருக்கிறது" என்று சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

தங்கத்தைப் பெருமளவில் இறக்குமதி செய்வதால் கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டில் (சிஎடி) அதிக நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை 8 சதவீதமும், பிளாட்டினத்தை இறக்குமதி செய்வதற்கான வரியை 2 சதவீதமும் அரசு அதிகரித்திருக்கிறது.

தங்கம் இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டிருக்கு 8 சதவீத வரி உயர்வு, கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்டிருக்கும் 2வது வரி உயர்வு ஆகும். கடந்த ஜனவரி மாதம் ஏற்கனவே 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதத்திற்கு தங்க இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருந்தது.

கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட்டில் (சிஎடி) ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு "சிஎடியில் தங்க இறக்குமதி, ஒரு முக்கிய பங்காற்றுகிறது. தங்கத்தின் விலையில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டாலும் மில்லியன் கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறும் போது "அந்த மில்லியன் கணக்கான மக்களில் நானும் ஒருவனாக இல்லாததை நினைத்து பயப்படுகிறேன். உலக அளவில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஒரு சிறிய சரிவு இந்தியாவிற்கு ஒரு கெட்ட செய்தியாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரிடம் கூறினேன். தற்போது அது நடந்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி இந்தியாவில் அதிகமாக இருந்தது.

"கடந்த ஏப்ரல் மாதம் நாம் 142 டன் தங்கத்தை இறக்குமதி செய்தோம். மே மாதம் அந்த இறக்குமதியை 162 டன்களாக அதிகரித்தோம். கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக செய்யப்பட்ட தங்கத்தின் இறக்குமதி அளவு 70 டன் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே தங்கத்தின் சராசரியான இறக்குமதி அளவு 152 டன்களாக அதிகரித்திறக்கிறது. அப்படி இருக்கும் போது நாம் எப்படி வாழ முடியும்?" என்று கேள்வியையும் சிதம்பரம் கேட்டிருக்கிறார்.

தங்கம் விலை குறைந்தாலும் பயமாக இருக்கிறது. அதிகரித்தாலும் பயமாக இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+