
அதன்படி உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், நகைக் கடைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவு மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு மட்டுமே அந்தநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை அந்த நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்கும் லெட்டர்ஸ் ஆப் கிரடிட் (LC)உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் மட்டுமே திறக்கப்பட வேண்டும். மேலும்இறக்குமதி செய்யப்படும் எல்லா தங்கமும் டாக்குமென்ட்ஸ் ஏகேன்ஸ்ட் பேமன்ட் (DP) அடிப்படையில்செய்யப்பட வேண்டும். எனவே இனி டாக்குமென்ட்ஸ் ஏகேன்ஸ்ட் அக்சப்டன்ஸ் (DA) அடிப்படையில்தங்கத்தை இறக்குமதி செய்வது அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், நகைக் கடைகளின்தேவைக்காக இறக்குமதி செய்யப்டும் தங்கத்திற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேற்சொன்ன விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படும். வாடிக்கையாளர்களின் நலன் கருதிஏடிக்கள்(AD) புதிய விதிமுறைகள் வழங்கப்படும். தங்கம் இறக்குமதி சம்பந்தமான மற்றவிதிமுறைகள் மாறாமல் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications