
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஜூன் 1 முதல் ஒன்றிற்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள், கேஒய்சி படிவங்களை கொடுக்காமல் இருந்தால், அவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்த தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் அறிக்கையின் படி, "எந்த ஒரு வர்த்தக பரிமாற்றமும் மானியம் அல்லாத சிலிண்டர்கள் விநியோகம் செய்ய, தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப்படாது".
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எல்பிஜி இணைப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளன.
"அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரப்பட்டியல் அந்தந்த எல்பிஜி விநியோகஸ்தர்களின் அலுவலகங்களிலும், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் இணைய தளத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் மட்டும், தங்களின் மானிய சிலிண்டர்கள் தடையில்லா ஒதுக்கீடு பெற, தங்களது எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் உடனடியாக அடையாள சான்று மற்றும் முகவரி சான்று இணைத்து கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.


Click it and Unblock the Notifications