தற்போது ஏன் தங்கம் வாங்கக் கூடாது என்பதற்கான 4 காரணங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் (22 கேரட்) அதன் உச்சபட்ச விலையான ரூபாய் 32,000த்திலிருந்து, கடந்த சில நாட்களாக 25,000 ரூபாய் முதல் 26,000 ரூபாய் வரையிலான விலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை மேலும் சரிவடையலாம் என்பதற்கு நம்பத்தகுந்த காரணங்கள் இருப்பதினால், நீங்கள் இன்னும் சற்று பொறுத்தால் இதை விட குறைவான விலையில் தங்கம் வாங்கலாம். தங்கத்தின் விலை மேலும் குறைய, சில காரணங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

(Power rates to rise; govt okays pass through for coal import)

ரூபாய் மதிப்பிறக்கம்

ரூபாய் மதிப்பிறக்கம்

ரூபாயின் மதிப்பு அதிவேகமாக இறங்கி, 2013 ஆம் வருட மே மாதத்தில் சுமார் 5%, ஜூன் மாதத்தில் சுமார் 2% டாலர் மதிப்பில் இறங்கியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. அரசு, ரூபாய் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதால், தங்க இறக்குமதி நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் விலையும் குறையலாம்.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களாக ஹெச்எஸ்பிசி, சிஎல்எஸ்ஏ மற்றும் ஜெர்மானிய வங்கிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்களில் தங்கத்தின் மீதான அவநம்பிக்கை வெளிப்படுவதைக் காணலாம்.

யு.எஸ்இன் தூண்டுதல்

யு.எஸ்இன் தூண்டுதல்

யு.எஸ்இன் பொருளாதார மீட்சி சூடுபிடித்து வருவதனால், யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ், குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் என்றழைக்கப்படும் அதன் செயற்கை தூண்டுதலை கைவிடக்கூடும். இதன் விளைவாக உலகளவில் தங்கத்தின் விலையில் ஒரு சரிவு உண்டாகலாம். குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் திட்டத்தை வாபஸ் வாங்கினால் தங்கத்தை பணமாக்கக்கூடிய சாத்தியமும் இறுகி விடும். சர்வதேச அளவில் ஏற்படும் தங்கத்தின் விலைச்சரிவு, உள்ளூர் விலைகளையும் சரியச் செய்யும்.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

இந்தியா தங்கத்தின் மிகப்பெரும் இறக்குமதியாளராகத் திகழ்கிறது. உண்மையில், இந்தியாவில் தங்கத்துக்கு நிலவும் தேவையானது உலக அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. சமீபத்தில் அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது; இதனால், தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் தங்கத்தின் கிராக்கியை பாதிக்கக்கூடும்; அவ்வாறாயின், வரும் மாதங்களில் இதன் தாக்கம் தங்கத்தின் விலையிலும் பிரதிபலிக்க்க்கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 reasons why you should not buy gold now

From a peak of Indian Rs 32,000, gold (22K) has been hovering around the Rs 25,000 - Rs 26,000 mark for sometime now. There are reasons to believe that gold prices may fall even further and you could wait for prices to dip, before buying. Here are some reasons for pessimism on gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X