
இந்த வசதியின் கீழ், முதலீட்டாளர் எஸ்ஐபி/எஸ்டிபி தவணைகளை, எஸ்பிஐ கெட்ஸ் -இனுடைய யூனிட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேர்வு செய்து கொள்ளலாம்.
எஸ்பிஐ -இன் ஒரு யூனிட், ஒரு கிராம் தங்கத்திற்கு சமானம். இதர மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போன்றே எஸ்பிஐ கோல்டு ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். இத்திட்டம் தங்கத்தை வசதியான முறையில் ஒரு ஆஸ்தியாக சேமிக்கும் வாய்ப்பை வழங்கக்கூடியது.
தங்க சேகரிப்பு வசதி எஸ்ஐபி -இன் நியதிகளும் நிபந்தனைகளும்:
•திட்டம்: எஸ்பிஐ கோல்டு ஃபண்ட்
•தவணை: மாதாந்திரம் & காலாண்டு
•குறைந்த பட்ச யூனிட்கள்: எஸ்பிஐ கெட்ஸ் -இன் ஒரு யூனிட் மற்றும் அதன் பன்மடங்கு
•அதிகபட்ச எஸ்ஐபி தவணைத் தொகை, 1 லட்ச ரூபாய்க்கு மிகாதவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
•குறைந்த பட்ச தவணைகள்: மாதாந்திர எஸ்ஐபிக்கு 6 மற்றும் காலாண்டு எஸ்ஐபிக்கு 4.
•இந்த வசதியை நேரடி டெபிட் வங்கிகள் மூலமாக மட்டுமே உபயோகிக்க முடியும்.
•முதலீட்டாளர் எஸ்பிஐ கெட்ஸ் -இன் யூனிட்களின் எண்ணிக்கையை எஸ்ஐபி மான்டேட் படிவத்தில் எஸ்ஐபி தவணையாகக் குறிப்பிடுவார்.
•தவணைத் தொகையை, நான்கு வணிக நாட்களுக்கு முன்னதாக, எஸ்பிஐ கெட்ஸ் என்.ஏ.வியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பின்னர் இத்தொகைக்கு வெகு அருகில் இருக்கக்கூடியதான ரூபாய் மதிப்புக்கு இது ரவுண்ட் ஆஃப் செய்யப்பட்டு, அதற்கேற்றவாறு எஸ்பிஐ கோல்டு ஃபண்டுக்கு யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக, எஸ்ஐபி தவணைக்கு உரிய நாள் 2013 ஜனவரி 5-ஆம் தேதி என்று வைத்துக் கொள்வோம். தவணைத் தொகை, 2013 ஜனவரி 1-ஆம் தேதிக்கான எஸ்பிஐ கெட்ஸ் என்.ஏ.வி.யின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
•எஸ்ஐபி மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே கிடைக்கின்றது. இவை 5-வது /10-வது /15-வது /20-வது /25-வது /30-வது (பிப்ரவரி மாதத்துக்கு, அதன் இறுதி வணிக நாள்) நாட்களேயாகும். ஒருவேளை, இந்த நாட்கள் விடுமுறையாய் இருப்பின், இதற்கு அடுத்த வணிக நாள்.
•வழக்கமான எஸ்ஐபி -இன் இதர நியதிகளும் நிபந்தனைகளும், எஸ்பிஐ கோல்டு ஃபண்டின் தங்க சேகரிப்பு வசதி எஸ்ஐபிக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications