தங்கம் வாங்குவது கடினமாகிக் கொண்டே வருகிறது!!

தங்கம் வாங்குவது கடினமாகிக் கொண்டே வருகிறது!!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நாட்டில் உள்ள தங்க உலோக நுகர்வோரை சோர்வுபடுத்தக்கூடிய எதையும் விட்டு வைக்கவில்லை. நகைக்கடைகளில் வாங்கும் தங்கத்திற்கான தொகையை கிரெடிட் கார்டு மூலம் ஈக்வேட்டட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட்ஸ் எனப்படும் இஎம்ஐக்கள் மூலம் செலுத்தக்கூடிய வசதியை ஆர்பிஐ தற்போது தடை செய்துள்ளது.

தற்சமயம் அனைத்து மத்திய வங்கிகளையும், அவர்தம் கிளைகளில் தங்கம் வாங்குவதற்கு கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ளது. கிரெடிட் கார்டு வணிகத்தை பெருமளவில் ஊக்கப்படுத்தும் நோக்கில், சுமார் 10,000 ரூபாய்க்கு மேலான கொள்முதல்களுக்கு இஎம்ஐ வசதியை உபயோகித்துக் கொள்ளும் சௌகரியத்தை வழங்கி வரும் பல பெரிய வங்கிகளை இத்தீர்மானம் பாதிக்கக் கூடியதாய் இருக்கும்.

அயல்நாட்டு வங்கி ஒன்றின் ரீடெயில் ஹெட், "இதர வங்கிகள் தங்க நுகர்வை ஆதரிப்பதை, மத்திய வங்கி விரும்பவில்லை. இது பல்வேறு தகவல் பரிமாற்றங்களின் போதும் எங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. அதனால், தங்கம் வாங்குவதற்கு அளிக்கப்பட்டு வந்த இஎம்ஐ வசதியை நாங்கள் நிறுத்திவிட்டோம்." என்று தெரிவித்துள்ளதாக மீடியா ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

ஆர்பிஐ, வங்கிகளை தங்க நாணயங்களுக்கு கடன் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திய பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், தங்க இறக்குமதிகளை குறைக்கும் பொருட்டு, அதற்கான இறக்குமதி வரிகளை அரசாங்கம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இது நாட்டின் கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறையை மேலும் விரிவாக்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+