டாடா குழுமம் மேற்கு வங்காளத்தை விட்டு போகாது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
"நாங்கள் மேற்கு வங்காளத்தை விட்டு சென்றதில்லை, செல்லவுமாட்டோம்" என்று டாடா குழுமத்தினுடைய சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி, கடந்த திங்கள் கிழமை நடந்த டாடா குளோபல் பேவரேஜஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு இறுதி கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
டாடாவின் நானோ கார் தயாரிக்கும் இடமான ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில் டாடாவின் திட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமான டாடாவின் பங்குதாரர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இந்த தகவலைத் தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள சிங்கூரில் டாடா தனது நானோ கார் உற்பத்தி தொழிற்சாலையை நடத்த முந்தைய இடதுசாரி அரசு 400 ஏக்கர் நிலத்தை அளித்திருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும், ஏழை விவசாய மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது.
இதனை எதிர்த்து திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியின் தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தன. எனவே டாடா குழுமம் தனது நானோ கார்களைத் தயாரிக்கும் இடத்தை குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்துக்கு மாற்றியது. இந்த நிகழ்வு 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 அன்று நடந்தது.
விவசாய மக்களுக்கு ஆதரவாகவும் டாடா குழுமத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதால், விவசாய மக்களின் பேராதரவுடன் கடந்த 2011ல் நடந்த தேர்தலில் இடது சாரிகளை வீழ்த்தி திரணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சிங்கூரில் இருக்கும் டாடா குழுமத்தின் நானோ தொழிற்சாலை கைவிடப்பட்டது. எனினும் நீதிமன்ற பிரச்சனைகளினால் இன்னும் விவசாய மக்களுக்கு அவர்களுடைய நிலங்கள் திருப்பித் தரப்படாமல் இருக்கின்றன.
பானர்ஜியின் அரசு, கடந்த 2011 ஆம் ஆண்டில், சிங்கூர் பகுதி விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலங்களை திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் டாடா குழுமம் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றது.
எனினும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஒரு தனி பெஞ்ச், மம்தாவின் சட்டம் செல்லும் என்று உறுதிப்படுத்தியது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, டாடா உச்சநீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறது. ஆனாலும் இன்னும் தனது தீர்ப்பை வழங்காத உச்சநீதிமன்றம், அந்த நிலத்தை மேற்கு வங்க அரசிடம் டாடா திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த திங்கள் அன்று சிங்கூரில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம்தான் டாடா குழுமம், தாங்கள் மேற்கு வங்கத்தை விட்டு செல்ல முடியாது என்பதைத் தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications