
ஜெய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தங்க இறக்குமதியை பூரணமாக தடை செய்ய நம்மால் இயலாது. தங்கத்தோடு தொன்று தொட்டு பாரம்பரியான உறவு நிலவும் இந்த நாட்டில் அது இயலாத ஒன்று. நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில், நாம் சில காலத்துக்கேனும் தங்கத்திற்கான நமது தேவையை மட்டுப்படுத்த முடியுமா? தங்கத்துக்கான நம் தாகத்தை குறைக்க இயலுமா? 20 கிராம் தங்கம் வாங்கும் இடத்தில் 10 கிராம் மட்டுமே வாங்க முடியுமா என்று தான். நான் இந்திய மக்களைக் கேட்டுக் கொள்வது, தங்கத்திற்கான கிராக்கியை மட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பதே." என்றார்.
தங்க இறக்குமதியானது மே மாதத்தின் போது 162 டன்னாகவும், ஏப்ரலில் 141 டன்னாகவும் இருந்தது, ஜூன் மாதத்தில் இது 31 டன் வரை கீழிறங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2012-13 ஆம் வருடத்தின் போது தங்க இறக்குமதி சுமார் 830 டன்னாக இருந்தது. பண மதிப்பின் படி பார்த்தால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியானது மே மாதத்தின் போது இருந்த 8.39 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து கணிசமாகக் குறைந்து ஜூன் மாதத்தின் போது 2.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications