இந்தியாவில் பெண்களும்!! நிதி திட்டமிடலும்!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரேயா பிரதான் ஒரு ஐடி நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளர் மற்றும் அலுவலகத்தில் அவருக்கு ஒதுக்கப்படும் அனைத்து பணிகளிலும் முக்கியமான முடிவு எடுப்பதில் ஈடுபட்டு வந்தார், ஆனால் அவர் தாழ்மையாக அவரது கணவர் விருப்பப்படி அவரது நிதி திட்டமிடல் முடிவுகளை தள்ளி வைக்கிறார். ஏன் இந்த நிலை?

பெண்கள் காலம் காலமாக இருந்து வந்த பழைய தடைகளை உடைத்து, புதிய சவால்களை மற்றும் பொறுப்புகளை ஏற்றுகொண்டு தங்களை மேம்படுத்தும் போது, ஏன் நிதி மேலாண்மையில் மட்டும் தங்களை ஈடுபடுத்திகொள்ளக்கூடாது ?

நம்பிக்கையின்மை

நம்பிக்கையின்மை

பெண்கள் ஆண்களை விட சிறந்த பகுத்தறிவு மற்றும் எதிர்கால திட்டமிடலை திறனை பெற்றுள்ளனர் என்ற போதிலும், தாங்கள் தோல்வி அடைந்து விடுவோம் அல்லது அவமானப்பட்டுவிடுவோம் என்று நிதி சந்தைகளில் நுழைவதற்கு இன்னும் பயப்படுகிறார்கள். செயல்பாட்டில், அவர்கள் ஆண்கள் சமமாக உள்ளனர் என்ற உண்மையை மறந்து விடுகின்றனர்.

நிதி வாசகங்கள் நிறைந்து உள்ளன

நிதி வாசகங்கள் நிறைந்து உள்ளன

பெண்களிடம் நிதி வாசகங்கள் வரும் போது அவர்கள் கை கட்டி கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதினால் நிதி முதலீடுகள் மற்றும் திட்டமிடல் சம்பந்தப்பட்ட உரையாடல்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்திவிடுகின்றனர்.
உதாரணமாக, 'பரஸ்பர நிதி சொத்து மதிப்பு' மற்றும் 'சொத்து ஒதுக்கீடு' போன்றவற்றை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஒரு நிதி திட்ட ஆலோசகர் உதவியுடன் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் அதை பற்றி பேசவும் மற்றும் முதலீட்டிற்கான அடிப்படை கல்வியை தங்களுக்கு போதித்து கொள்ள வேண்டும்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

பெண்களை முதலீட்டாளர்களாக பார்ப்பதை விட பெரும் செலவாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர். ஷாப்பிங் செய்யும் பொழுது, கவர்ச்சியான தள்ளுபடியை பார்ப்பதை விடுத்து புத்திசாலிதனமான முதலீட்டை பார்க்க வேண்டும்

இரண்டாம் வருமானம்

இரண்டாம் வருமானம்

பெண்கள் வீட்டு காரியங்களை பார்த்து கொள்வதற்காக மட்டும், அதாவது இரண்டாம் வருமானம் பெற்று தரக்கூடிய நபராக மட்டுமே பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி தங்களின் நிதி மேலாண்மைக்கு தன் தந்தையையோ அல்லது கணவனையோ சார்ந்து இருக்க நேரிடுகிறது. இந்த நிலைமையை மாறினால் பெண்கள் நிதியை மேலாண்மையில் ஆண்களை விட சிறந்த மேலாளர்களாக இருக்கமுடியும்.

ஏன் பெண்கள் நிதி திட்டமிடல் வேண்டும்?

ஏன் பெண்கள் நிதி திட்டமிடல் வேண்டும்?

ஒரு சில நிகழ்வுகள் பெண்களின் வாழ்கையை தாறுமாறாக மாற்றிவிடும், இதனால் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். பெண்கள் இத்தகைய காரணங்களுக்காக நிதி கட்டுப்பாட்டை பெண்கள் கையில் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான சில காரணங்கள் இங்கு பட்டியிலிடப்பட்டுள்ளன.

விவாகரத்து

விவாகரத்து

இந்தியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து வருகிறது. நிதி விஷயங்களை கணவரிடம் ஒப்படைத்து இருந்தால் இது போன்ற சூழ்நிலைகளில் பண பற்றாக்குறை நம்மை அதல பாதாலத்தில் வீழ்த்தி விடும். இது போன்ற நிதி சிக்கல்களை தவிர்க்க , உங்கள் மாதாந்திர முதலீடுகள் மேல் கவனம் வைத்து தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்குவது போன்ற முடிவுகளை எடுப்பது சிறந்தது.

குழந்தைகளை பெற்றுகொள்வதல்  இடைவெளி

குழந்தைகளை பெற்றுகொள்வதல் இடைவெளி

குழந்தையை எதிர்ப்பார்த்து இருக்கும் தாய்மார்கள், மகப்பேறு விடுப்பிற்கு அதிகமாக விடுப்பு எடுக்க விரும்பினால், நிதி பொறுப்புகள் காரணமாக எடுக்க முடியாது. எனவே, ஒரு முறையான திட்டம் மூலம் இதை செய்ய உதவும்.

மகள் மகனாக இருப்பது

மகள் மகனாக இருப்பது

இன்று நிறைய குடும்பங்களில் மகள்கள் தங்கள் குடும்பங்களுக்கு மகன்களாக மாறி குடும்பத்திற்கு நிதி பங்களிப்பை அளித்து வருகின்றனர். பெண்கள், நிதி முடிவுகளில் பங்கெடுப்பதன் மூலம், திருமணத்திற்கு பிறகும் தங்கள் குடும்பத்திற்கு பங்காளியாகவும் ஒரு சொத்தாகவும் தொடர்ந்து இருக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Financial planning for Women in India

Today, when women are breaking age-old barriers and empowering themselves to new challenges and responsibilities, then why not for finances?
Story first published: Thursday, July 25, 2013, 19:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X