இந்தியாவின் தங்க நுகர்வு 310 டன்களை எட்டியது!!

ஜூன் மாதத்தோடு முடிவடைந்த இரண்டாவது குவார்ட்டரில், கரன்ட் அக்கவுன்ட் பற்றாக்குறை அதிகரிப்பை முடக்கும் பொருட்டு, தங்க இறக்குமதிகளில் அரசு காட்டிய கெடுபிடிகளையும் மீறி, இந்தியாவின் தங்க நுகர்வு, கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையான சுமார் 310 டன்களை எட்டியுள்ளது என்று ஒரு WGC தகவலறிக்கை இன்று தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத விலை சரிவுக்குப் பின், ஆரோக்கியமான நிலையில் காணப்படும் பங்குகளைக் கொண்டு எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தின் போது, ஏற்றுமதிகள் இரண்டு மடங்குக்கும் மேலாக சுமார் 338 டன்கள் வரை உயர்ந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டின் போது தங்க நுகர்வு சுமார் 181.1 டன்களாக இருந்துள்ளது.

வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் அறிக்கை

வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் அறிக்கை

"இந்தியாவில் உள்ள நுகர்வோர், தொடர்ந்து தங்கத்தின் மீதான தங்களின் மோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், தங்கத்திற்கான கிராக்கியை குறைக்கும் பொருட்டு அரசு மேற்கொண்ட எந்த நடவடிக்கையினாலும் சிறிதும் பாதிக்கப்படாவில், என இந்த காலாண்டு முடிவுகள் நிரூபிக்கின்றன. கடந்த வருடம் நுகர்வோர் கிராக்கி, சுமார் 310 டன்களாக, அதாவது 71 சதவீதமாக இருந்துள்ளது." என்று வேர்ல்டு கோல்டு கவுன்சில் (WGC) தனது சமீபத்திய தகவலறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தங்க இறக்குமதி

தங்க இறக்குமதி

WGCயின் இந்திய நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் பிஆர், "கடந்த பத்து ஆண்டுகளில், இவ்வருட Q2வில் தங்க கிராக்கியே தலைசிறந்ததாகும். கடந்த ஏப்ரல் மாதத்தின் போது தங்க விலையில் ஏற்பட்ட சரிவு, தங்க ஆபரணங்களுக்கான கிராக்கியை, ஓராண்டுக்கு முன்பிருந்த 124 டன் அளவிலிருந்து, 50 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 188 டன்களாக இவ்வருட Q2வில் உயரச்செய்துள்ள அதே வேளையில், தங்கக்கட்டி மற்றும் தங்க நாணயங்களின் நுகர்வை, மறுசீராய்வு காலத்தின் போது இருந்த 56.5 டன் அளவிலிருந்து வரலாறு காணாத அளவிற்கு சுமார் 122 டன்னாக உயரச்செய்துள்ளது." என்று கூறியுள்ளார்.

பேமெண்ட் விதிமுறைகள்

பேமெண்ட் விதிமுறைகள்

மேலும், "தங்க இறக்குமதிகளுக்கான பேமெண்ட் விதிமுறைகளில் மே மாதத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வரையறைகள் மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தின் போது சுமார் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட இறக்குமதி வரி ஆகியவை சந்தையில் தடுமாற்றத்தை உண்டாக்கினாலும், இறுதிப் பயனீட்டாளரின் தேவையை அது மிகக் குறைந்த அளவே பாதித்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி வரி உயர்வு

இறக்குமதி வரி உயர்வு

உலகின் மிகப்பெரும் தங்கக் கொள்வனவாளரான இந்தியா, கச்சா எண்ணை இறக்குமதிகளுக்குப் பின் நாட்டின் மிகப்பெரும் இறக்குமதிப் பொருளாக விளங்கும் இந்த மஞ்சள் உலோகத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று, அரசாங்கம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை, இந்த எட்டு மாதங்களில் மூன்றாவது முறையாக, 8 சதவீதத்திலிருந்து சுமார் 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+