
சென்னை: இறக்குமதிகள் மீதான அரசின் கெடுபிடிகளுக்குப் பின் தங்கத்திற்கான கிராக்கி, 860 டன்னாக தொடர்ந்து இருந்து வந்தாலும், இவ்வருட இறுதிக்குள் 10 கிராம் தங்கம் 31,000 ரூபாய் என்ற நிலையை தொடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"வலுவற்ற ரூபாய் மற்றும் அதீத வரி ஆகியவை தங்கத்தின் நிகர விலையை அதிகமாகவே வைத்திருக்கும். டிசம்பர் மாத இறுதியில் இந்த மஞ்சள் உலோகம் சுமார் 30,500 ரூபாயிலிருந்து 31,000 ரூபாய் வரையிலான விலையுடன் இருக்கும்." என்று ஏஞ்சல் புரோக்கிங் ஹெட் கம்மோடிட்டீஸ் -இன் நவீன் மதுர், பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.
எம்சிஎக்ஸ்-இல் (MCX) சுமார் 28,600 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் சுமார் 1,376.70 டாலராக இருந்துள்ளது.
அரசாங்கம் தங்க இறக்குமதியை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விடும் பட்சத்தில், அது தங்க விநியோகத்தை பாதித்து அதன் விலைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் மதுர் கூறியுள்ளார்.
வலுவான யு.எஸ். டாலர் மற்றும் மீட்சியடைந்து கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் பற்றிய தகவல்களினால் தற்போது தங்கம் சர்வதேச அளவில், வரையறைக்குட்பட்டு, கரடுமுரடான எதிர்கால வாய்ப்புடன் கூடியதாகவே காணப்படுகிறது.
"இவ்வருட இறுதில், ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,375 முதல் 1,400 டாலர் என்ற விலையை தொடும், எதிர்மறை அடிப்படைக்கூறுகளான வலுவடைந்து வரும் யு.எஸ். டாலர் மற்றும் அதிகரித்து வரும் சீன கிராக்கி ஆகியவற்றினால் இழுக்கப்படும்." என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கத்துக்கான கிராக்கி கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் இருக்கும் என்பதே மதுர் அவர்களின் கணிப்பாகும்.
"நான்காவது குவார்ட்டர் (Q4) தங்கத்திற்கான கிராக்கி மீண்டும் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தாலும், அபரிமிதமான சுங்க வரி, அதீத விலைகள் மற்றும் விநியோக பற்றாக்குறை போன்றவை அதனை கட்டுக்குள் வைத்திருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உலகெங்கிலும் உள்ள தங்கச் சுரங்க நிறுவனங்களின் பிரதிநிதியாக செயல்படும் வேர்ல்டு கோல்டு கவுன்சில், 2013 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்திற்கு இருக்கக்கூடிய கிராக்கி, 900 முதல் 1000 டன்களுக்கு (ஒவ்வொரு நாட்டுக்கும்) இடைப்பட்ட அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications