மும்பை: மும்பை பங்குசந்தையில் சிறந்த நிறுவனமாக கருதப்படும் டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 27,552 கோடி ரூபாய் வரை அதிகரித்தது. இதில் அதிக முதலீட்டை பெற்றது டிசிஎஸ் தான்.
டிசிஎஸ், ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்கள் சந்தை முதலீட்டில் ஏறுமுகத்தைக் அடைந்தாலும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.
டிசிஎஸ்
டிசிஎஸ் கடந்த வாரத்தில் அதன் சந்தை முதலீட்டில் 9,375 கோடி ரூபாய் அதிகரித்ததன் முலம் அந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு 3,57,799 கோடி என்ற நிலையை ஏட்டியது. இதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 2.7% உயர்வு அடைந்து 1,828.10 ரூபாய் விலையை தொட்டது.
கோல் இந்தியா நிறுவனம்
கோல் இந்தியா நிறுவனத்தின் முதலீடு 7,232 கோடி அதிகரித்து 1,70,415 கோடி ரூபாயை மொத்த மதிப்பீடு 1,70,415 கோடியை தொட்டது. இதேபோல் கடந்த வாரம் எச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி நிறுவனங்களின் சந்தை மதிப்பீடும் அதிகரித்தது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை முதலீடு 1,372 கோடி அதிகரித்ததன் முலம் அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 1,72,184 கோடி என்ற நிலையை எட்டியது.
பார்தி ஏர்டெல்
இதற்கு மாறாக பார்தி ஏர்டெல் 10,893 கோடியும், ஐடிசி நிறுவனம் 9,331 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,970 கோடி ரூபாய் சரிவை சந்தித்தாது.
டிசிஎஸ் தான் முதல் இடம்
இதனால் சந்தையின் டாப் 10 இடத்தில் டிசிஎஸ் தான் இப்பொழுதும் முதல் இடத்தில் உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் மற்றும் எச்டிஎஃப்சி.
சென்செக்ஸ் 0.42% புள்ளிகள் சரிவு
மேலும் கடந்த வாரம் வெள்ளிகிழமை சந்தை முடிவில் சென்செக்ஸ் 0.42% புள்ளிகள் சரிந்து 18,519.44 புள்ளிகளை தொட்டது.


Click it and Unblock the Notifications