திங்களன்று டாமினோஸ் பிட்ஸா தனது 600 வது கிளையை டெல்லி வசந்த் குஞ் பகுதியில் திறந்தது. அந்நிறுவனம் ஆரம்பித்துள்ள இந்த கிளை "பிட்ஸா தியேட்டர்" கருத்தாக்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் பிட்ஸா செய்வதை நேரடியாக பார்க்க முடியும்.
இந்த கிளையை ஷியாம் எஸ் பார்தியா (தலைவர்) , ஹரி எஸ் பார்தியா (இணை தலைவர்), அஜய் கவுல் (தலைமை நிர்வாக அதிகாரி, ஜுபிலண்ட் பூட்வொர்க்ஸ் லிமிடெட்) மற்றும் ஸ்டீவன் பீசோல் (துணை தலைவர், ஆசிய பசிபிக், டாமினோஸ் பிட்ஸா) ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
"பிட்ஸா தியேட்டர்"
"பிட்ஸா தியேட்டர்" என்ற உலகளாவிய கருத்தாக்க உணவகம் ஏற்கனவே உலகின் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திறந்த சமையலறை காட்சியமைப்பு கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த உணவகம், நுகர்வோர் ஈடுபாடு மற்றும் அனுபவத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிட்ஸா தியேட்டர்
கடையை திறந்து வைத்து பேசிய ஷியாம் பார்தியா, டாமினோஸ் பிட்ஸாவின் இந்த 600 வது உணவகத் திறப்பு, நாடு முழுவதும் கிளைகளைத் திறக்கும் நோக்கத்திற்கு ஒரு பெரிய ஆரம்ப படியாகும்" என்று கூறினார்.
இந்திய சந்தை மிக முக்கியமான ஒன்று
இந்த நிகழ்ச்சியில் கழந்து கொண்டு பேசிய, ஸ்டீவன் பீசோல் " உலக அளவில் பரவியுள்ள டாமினோஸ் பிட்ஸா, 72 நாடுகளில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்திய சந்தை இந்நிறுவனத்தின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது" என்று கூறினார்.
128 நகரங்களில் டாமினோஸ் பிட்ஸா கிளைகள்
ஜுபிலண்ட் பார்தியா குழுமத்தின் கிளை நிறுவனமான ஜுபிலண்ட் பூட்வொர்க்ஸ் லிமிடெட், 128 நகரங்களில் டாமினோஸ் பிட்ஸாவின் கிளைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications