இந்தியா விஐஎக்ஸ் (VIX) அல்லது இந்தியா வொலட்டிலிட்டி இன்டெக்ஸ் என்பது சந்தையில் நிலவும் நிலையற்ற நிலைமையின் குறியீடு. எனவே, பங்குச் சந்தையின் நிலை உயர்வாக இருக்கும் சூழலில், விஐஎக்ஸ் குறியீடு அதிகரிக்கும். அதேபோல் பங்குச் சந்தை குறைவாக இருக்கும் பட்சத்தில், விஐஎக்ஸ் குறியீடும் குறைந்து விடும். மேலும், இந்த இன்டெக்ஸ், நாட்காட்டியின் அடுத்த 30 நாட்களில் எதிர்பார்க்கக்கூடிய நிலையற்ற நிலையை குறிக்கும்.
இந்தியா விஐஎக்ஸ் கணக்கீடு
இந்தியா விஐஎக்ஸ் குறியீடு, தேசியப் பங்குச் சந்தையில் வழங்கப்படும் உள்ளார்ந்த நிஃப்டி ஆப்ஷன்களின், ஆர்டர் புத்தகங்களை கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்தியா விஐஎக்ஸ்-இன் மதிப்பு, என்எஸ்இயின் எஃப்&ஓ பிரிவில் வர்த்தகம் செய்யப்படும், நடப்பு மற்றும் அடுத்த மாதத்தில் குறைவான விலையில் வர்த்தகம் செய்த பங்குகளை மற்றும் தலைசிறந்த பிட்-ஆஸ்க் கோட்களைப் பொறுத்து வருடாந்தர அடிப்படையிலான சதவீதங்களை கணக்கிடப்படும்.
விஐஎக்ஸ் குறியீட்டின் சிறப்பு
பங்குச் சந்தைகளின் போக்கை கணிக்க முடியாத காலகட்டங்களில், முதலீட்டாளர்கள் விஐஎக்ஸ் -ஐ கருத்தில் கொண்டு தங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். கடந்த காலத் தகவல்களின் அடிப்படையிலான ஒரு வலுவான சாதனம் என்பதை நிரூபித்துள்ள விஐஎக்ஸ், நிகழ்காலத்தில் பங்குச் சந்தையில் நிலவக்கூடிய குழப்பங்களை கண்டுகொள்ளவும், அவற்றை தெளிவாக விளக்கவும் கூடிய ஆற்றல் படைத்ததாகும்.
இந்தியா விஐஎக்ஸ் மதிப்பின் பொருள்விளக்கம்
இந்தியா விஐஎக்ஸ்-இன் பரப்பு, வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். புல் மார்க்கெட்டில் 18-24% ஆக இருக்கும் விஐஎக்ஸ் -இன் விஸ்தீரணமானது, பியர் மற்றும் விஸ்தீரண அடிப்படையிலான மார்க்கெட் சூழல்களில் தலா 25-40% மற்றும் 16-21% ஆக உள்ளது.
29.42 இந்தியா விஐஎக்ஸ்!!
2013 ஆகஸ்ட் 21 ஆம் தேதியில் 29.42 ஆகக் காணப்பட்ட இந்தியா விஐஎக்ஸ் -இன் மதிப்பே கடந்த 17 மாதங்களில் அதிகமான மதிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்து வரும் 30 நாட்களுக்குள் இந்த 29.42% மதிப்பு வரிசையில் வருடாந்தர அடிப்படையில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
பங்கு சந்தையில் முதலீடு செய்ய விஐஎக்ஸ் மதிப்பு அவசியம்
விஐஎக்ஸ் மதிப்பு அதிகமாக இருப்பது, சந்தை பங்கேற்பாளர்களிடையே பதற்றம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சிகள் நிலவி வருவதைக் காட்டக்கூடியதாகும். இத்தகைய ஒரு சூழலில் தான், முதலீட்டாளர்கள் பல்வேறு பங்குகளுக்கும் சிறந்த நுழைவு விலையைப் பெற முடியும். எனவே, முதலீட்டாளர்கள் விஐஎக்ஸ் -இன் மதிப்பு அதிகமாக இருக்கும்போது பங்குகளை வாங்குவதும், விஐஎக்ஸ் -இன் மதிப்பு குறையும் போது தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பதும் சாலச் சிறந்தது என்பதே பல்வேறு ஆய்வாளர்களின் பொதுவான அனுமானம் ஆகும்.


Click it and Unblock the Notifications