தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு!!!
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு!!!

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான வரி மதிப்பை மத்திய அரசு நேற்று குறைத்துள்ளது. 461 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த 1௦ கிராம் தங்கத்திற்கான இறக்குமதி வரி மதிப்பை 458 அமெரிக்க டாலராக குறைத்துள்ளது. அதே போல் 803 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்த ஒரு கிலோ வெள்ளிக்கான இறக்குமதி வரி மதிப்பை 783 அமெரிக்க டாலராக குறைத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன

நான்காவது நாளாக தொடர்ந்து தங்க விலை உயர்வின் காரணமாக நட்டத்தை சந்தித்ததின் தொடர்ச்சியாக மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் 1௦ கிராம் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாதளவு உயரத்துக்கு உயர்ந்து 34,500 ரூபாயை தொட்டது.

இன்று தங்க விலை குறைந்து 33,838 ரூபாய்க்கு வீழ்ந்தது. எனினும் வெள்ளி மூன்று நாட்களாக ஏற்பட்ட நட்டத்தில் இருந்து மீண்டு ஒரு கிலோ வெள்ளி 56,550 ரூபாய்க்கு விற்றது. ஆனால் ஒட்டுமொத்தத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தங்க விலை 8 சதவிதம் உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+