
திரு.ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவிக்கு வந்த பிறகு வர்த்தக சந்தையில் நிலவிய நிலையற்ற தன்மை நீங்கி, சீரான வளர்ச்சி பாதையில் செல்ல துவங்கி உள்ளது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 10) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 22 ரூபாய் குறைந்து 2812.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து 3006.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,120
ஹைதராபாத் : ரூ. 27,700
பெங்களூரு : ரூ. 27,600
கொல்கத்தா : ரூ. 28,140
டெல்லி : ரூ. 28,100
மும்பை : ரூ. 28,190


Click it and Unblock the Notifications