ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கடந்த சில மாதங்களாக வர்த்தக பற்றாக்குறை அதிகமாக இருந்து, ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த பற்றாக்குறை சற்றுக் குறைந்துள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்ததின் விளைவாக 10.91 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சாராசரியாக 38.01 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்து வந்த இறக்குமதி, ஆகஸ்ட் மாதத்தில் 37.05 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

அதைபோன்று ஜூலை மாதத்தில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், ஆகஸ்ட் மாதத்தில் 0.65 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி அளவு 13 சதவிதமாக உயர்ந்து, இதனால் அதன் மதிப்பு 26.14 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது.
அதிகமான வர்த்தக பற்றாக்குறையால் உயர்ந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், ரூபாய் மதிப்பின் சரிவையும் சமாளிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்க இறக்குமதி குறைந்ததாலும், ஏற்றுமதி அதிகரித்தன் விளைவாக ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சிறிதளவு குறைந்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருந்ததால், தொடர்ந்து சில நாட்களாக அதிகரித்து வந்த ரூபாய் மதிப்பு வியாழனன்று மதியத்திற்கு பின் சிறிது குறைந்தது. கடைசியாக வர்த்தக சந்தையின் முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 64.24 ஆக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications