சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றமும் இல்லை, இதனால் நேற்றைய விலையிலே இன்று தங்கம் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதேபோல் ரூபாய் மதிப்பு இன்று 90 பைசா உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.62.56 என்று உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வால் இன்றைய பங்கு சந்தையில் வங்கி துறையும், மோட்டார் துறையும் லாபகரமான நிலையை அடைந்தது. இதற்கு நேர்மாறாக ஐடி துறை பங்குகள் சரிவை சந்தித்தது.

மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (செப்டம்பர் 16) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2835.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.3032.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,350
ஹைதராபாத் : ரூ. 28,120
பெங்களூரு : ரூ. 28,050
கொல்கத்தா : ரூ. 28,190
டெல்லி : ரூ. 28,220
மும்பை : ரூ. 28,210


Click it and Unblock the Notifications