தங்கம் விலையில் 19 ரூபாய் உயர்வு!!!
சென்னை: இன்று வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 19 ரூபாய் உயர்ந்தது. மேலும் ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.24 ரூபாயாக இருக்கிறது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 5) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 19 ரூபாய் உயர்ந்து 2766.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 21 ரூபாய் உயர்ந்து ரூ.2962.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
சென்னை : ரூ. 27,660
ஹைதராபாத் : ரூ. 27,290
பெங்களூரு : ரூ. 27,250
கொல்கத்தா : ரூ. 27,670
டெல்லி : ரூ.27,490
மும்பை : ரூ. 27,480


Click it and Unblock the Notifications