வர்த்தக பற்றாக்குறை 80.1 பில்லியன் டாலராக சரிவு!! ரூபாய் மதிப்பு உயரும்...

சென்னை: தடுமாற்றத்தில் இருக்கும் ரூபாய் மதிப்பிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட வித்தியாசத்தில் வர்த்தக பற்றாக்குறை 6.79 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. இந்த நிலை கடந்த 30 மாதங்களில் குறைவன அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பின் நிலையற்ற தன்மையால் தங்கம், கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் இறக்குமதி குறைந்ததன் விளைவாக ஏற்றுமதி 11.15 சதவீதம் உயர்ந்ததுள்ளது. ஏற்றுமதி மட்டுமே வர்த்தக பற்றாக்குறையை காப்பாற்றியது என்று சொன்னால் மிகையாகாது.

ஜிடிபி 4.8 சதவீதம்

ஜிடிபி 4.8 சதவீதம்

இந்த வர்த்தக பற்றாக்குறையின் நிலை நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு சாதகமாக அமைந்து. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் சரக்குகள், சேவை, பரிமாற்றத்தின் முலம் 2012-2013 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவீதமாக உயர்ந்தது, ஆனால் இப்பொழுது பணம் நெருக்கடி கடும் பிரச்சனையாக உள்ளது.

இறக்குமதி 18.1% சரிவு!!

இறக்குமதி 18.1% சரிவு!!

செப்டம்பர் மாதத்தில் இறக்குமதி 18.1 சதவீதம் குறைந்துள்ளது, இதற்கு மாறாக ஏற்றுமதி 11.15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை கடந்த 30 மாதங்களில் குறைவான அளவை பதிவு செய்தது. மேலும் இறக்குமதி குறைக்கும் நடவடிக்கை சரியான முறையில் செயல்படுவதல், இந்நடவடிக்கையின் முலம் ரூபாய் மதிப்பு வலுவடையும் என்று நம்புகிறேன்" என வர்த்தக செயலாளர் எஸ். ஆர். ராவ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை

தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை நிறுவியது அவை, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிதம் ஏற்றுமதி செய்ய வேண்டும், மேலும் அகஸ்ட் மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 சதவிதம் வரியை உயர்த்தியது. இதன் விளைவு செப்டம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 80% சரிவு, கச்சா எண்ணெய் இறக்குமதி 6% சரிவு.

வர்த்தக பற்றாக்குறை 80.1 பில்லியன் டாலர்

வர்த்தக பற்றாக்குறை 80.1 பில்லியன் டாலர்

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.14 % அதிகரித்துள்ளது, இறக்குமதி 1.8 சரிந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 80.1 பில்லியன் டாலராக உள்ளது.

டாலர் மதிப்பு..

டாலர் மதிப்பு..

வர்த்தக பற்றாக்குறையை தொடர்ந்து இன்று வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு எதிரான் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 62.10 என்ற நிலையில் வர்த்தகமாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+